நடிகர் ஸ்ரீ உடல்நிலை எப்படி இருக்கு? லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அறிக்கை!
நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதாக அறிக்கை ஒன்றை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஸ்ரீ. 2023-ல் வெளியான இறுகப்பற்று திரைப்படத்திற்கு பிறகு வேறு படத்தில் நடிக்காமல் இருந்த ஸ்ரீ, சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார்.
அதில் தான் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. நல்ல திறமையான நடிகராக அறியப்பட்ட ஸ்ரீ, ஆளே மாறிப்போய் மெலிந்த தோற்றத்தில் நிறைய முடி வளர்த்து அதனை கலர் செய்து வேறு தோற்றத்தில் இருந்தார். மேலும் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டும் இருந்தார். இதனால் நடிகர் ஸ்ரீ மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என பல்வேறு செய்திகள் இணையத்தில் உலா வர ஆரம்பித்தன. மேலும் அவர் இருக்கும் இடத்தையும் பலரும் தேடி வந்தனர்.
இப்படியான சூழலில் தான் ஸ்ரீயின் உடல்நிலை குறித்து லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் ஸ்ரீராம், தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளார் என்றும், தற்போது அவரது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சமூக வலைதளங்களில் இருந்து விலகி ஓய்வு எடுத்து வருகிறார் என்பதை அனைத்து நலம் விரும்பிகள், நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். என்று பதிவிடப்பட்டுள்ளது.
மேலும், அவர் தனது உடல்நலத்தில் கவனம் செலுத்துவதால், அவரது தனியுரிமையை மதிக்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். சில யூகங்கள் மற்றும் தவறான தகவல்கள் அவருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தலாம். மேலும், அவரது உடல்நிலை குறித்த வதந்திகள் அல்லது சரிபார்க்கப்படாத செய்திகளை பரப்புவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடக தளங்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
அவரது தற்போதைய நிலை குறித்த ஏதேனும் ஆட்சேபனைக்குரிய தரவுகள் அல்லது நேர்காணல்கள் ஏற்கனவே பதிவிடப்பட்டு இருந்தால் அதனை அகற்றுமாறும், தன்னை மீட்பதில் நடிகர் ஸ்ரீ கவனம் செலுத்தும் போது அவரது தனிப்பட்ட உரிமையை மதிக்குமாறும் ஊடகத் தளங்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
நேர்காணல்களில் குறிப்பிட்ட நபர்கள் வெளிப்படுத்தும் எந்தக் கருத்தையும் நாங்கள் ஆதரிப்பதில்லை. அதை முற்றிலும் மறுக்கிறோம். இந்த நேரத்தில் உங்கள் தொடர்ந்த அன்பு மற்றும் ஆதரவு மற்றும் புரிதலுக்கு நன்றி என லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை ஸ்ரீயின் குடும்பத்தார் வெளியிட்ட அறிக்கை எனக் கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படமான மாநகரம் படத்தில் இரு கதாநாயகர்களில் ஒருவராக நடித்தவர் நடிகர் ஸ்ரீ. அப்போது இருந்தே இருவருக்கும் ஓரளவுக்கு நட்பு உள்ளது என்றும் அதன் பெயரில் இந்த அறிக்கையை லோகேஷ் வெளியிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
April 19, 2025