‘தலைவர் 171’ டைட்டில் இதுவா? போஸ்டரில் சொல்லி அடித்த லோகேஷ்…
Thalaivar 171: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 171 படத்தின் தலைப்பு என்னவென்று தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையான் படத்தில் பிஸியாக இருக்கிறார், அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக “தலைவர் 171” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டைட்டில் டீசர் ஏப்ரல் 22ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், தலைவர் 171 டைட்டில் டீசர் வீடியோவிற்கான வேலைகளை தயாரிப்பாளர்கள் முடித்துள்ளளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் படத்தின் டைட்டில் டீசர் வெளியானதும் படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைவர் 171 டைட்டில் குறித்த வெளியாகவுள்ள வீடியோவில் கமல்ஹாசன் குரல் கொடுத்திருப்பார் என கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் அது தொடர்பாக உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இது ஒரு பக்கம் இருக்க, தலைவர் 171 டைட்டில் பற்றிய சில தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. அதாவது, இந்த படத்திற்கு ராணா, கோல்டு, கழுகு மற்றும் Bang on the Money ஆகிய பெயர்களில் டைட்டில் இருக்கலாம் என வதந்திகள் பரவி வருகிறது.
அதே நேரத்தில் முன்னதாக வெளியாகியிருந்த படத்தின் போஸ்டரும் இந்த டைட்டில்களுக்கு ஷூட் ஆகிற மாதிரி இருக்கிறது. எது என்னவோ? என்ன டைட்டில் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.