இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு தாற்காலியமாக “தலைவர் 171” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
இயக்குனர்டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170-வது படத்தில் ரஜினி நடித்து வரும் நிலையில், தற்போது தலைவர் 171 படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது, இதன் படப்பிடிப்பு ஏப்ரல் 2024 இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு படத்திலாவது ரஜினியுடன் இணைந்து படம் நடிப்பாரா என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அந்த கனவு ஒரு வழியாக இயக்குனர் லோகேஷ் மூலமாக நிறைவேறியுள்ளது.
அதாவது, நடிகர் சிவகார்த்திகேயன் சிறிய வயதில் இருந்தே ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதும், அவருடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவரது நீண்ட நாள் கனவு என்று பல தருணங்களில் வெளிப்படுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி, சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்த சமயத்தில் சிவகார்த்திகேயன் பல மேடைகளிலும் ரஜினியின் குரலை தான் மேமிக்ரி செய்திருக்கிறார்.
ஜெயிலரை விட்டாச்சு…தலைவர் 171 ஐ பிடிச்சாச்சு! சிவகார்த்திகேயனுக்கு அடித்த ஜாக்பார்ட்?
இந்த நிலையில், “தலைவர் 171” படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நடிகர் சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. தற்போது, அந்த தகவல் உறுதியாகிவிட்டது. ஆம், சிவகார்த்திகேயனின் நீண்ட நாள் கனவான ரஜினியுடன் நடிக்க காத்திருந்த நிலையில், தலைவர் 171 அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார் என்று நம்பகமான சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
‘தலைவர் 171’ கதை எனக்கு தெரியும்.! கெளதம் மேனன் ஓபன் டாக்.!
இந்நிலையில், இந்த தகவலை வைத்து பார்க்கையில், முன்னதாக ஜெய்லரில் நடிக்கும் வாய்ப்பை தவிர விட்ட சிவகார்த்திகேயனுக்கு லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில், இந்த படத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், பிருத்விராஜ் சுகுமாரன் மேலும் சிலர் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான…
சென்னை : 2025 - 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில்,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற…
சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
ஹைதிராபாத் : தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு, பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்றைய தினம்…