கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்வதற்கு தைரியமும், தெளிவும் தேவை – எச்.வினோத்.!
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படம் வரும் ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், இயக்குனர் எச்.வினோத் படத்தின் ப்ரோமோஷனுக்காக பல பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கடவுள் நம்பிக்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” இப்போது நான் கடவுள் இருக்கு இல்லை என்பது குறித்து நான் பேசப்போவதில்லை. கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்வதற்கு, பெரிய தைரியமும் தெளிவும் தேவைப்படுகிறது.
எனக்கு அந்த நம்பிக்கையும், தைரியமும் முழுமையாக இல்லை. என்னுடைய பிரச்னைகள் மற்றும் சிக்கல்களிடம் இருந்து, நான் மீண்டு வருவதற்கு, எனக்கு கடவுள் தேவைப்படுகிறார். நான் கடவுளை நம்புவதால் மற்றவர்களுக்கு எந்த பிரச்னையும் வரப்போவதில்லை.
கடவுளை வைத்து வியாபாரம் செய்யவோ, அதிகாரத்தை அடையவோ, பிறரை வெறுக்கவோ, பிரிக்கவோ முயலும் போதுதான், கடவுள் பிரச்னையாக மாறுகிறார்” என்று தெரிவித்துள்ளார், மேலும் இயக்குனர் எச்.வினோத் சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.