தமிழ் திரையுலகில் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுமானவர் நடிகர் பரத். இந்த படத்தை தொடர்ந்து காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இந்த படங்களை தொடர்ந்து பட்டியல், எம் மகன், வெயில், பழனி, வானம், போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். ரசிகர்கள் இவரை சின்ன தளபதி என்று அழைத்து வந்தனர். கடைசியாக இவரது நடிப்பில் வெற்றியடைந்த படம் என்றால் காளிதாஸ். அதனை தொடர்ந்து வெளியான எந்த படங்களும் பெரிதாக வெற்றிபெறவில்லை.
இந்த நிலையில், வெற்றியை கொடுக்கும் நோக்கில் பரத் தற்போது தனது 50-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆர் பி பாலா என்பவர் இயக்க ஆர்.பி நிறுவனம் தயாரித்துள்ளது.படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடிகை வாணிபோஜன் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் மலையாள நடிகர் மோகன் லால் வெளியிட்டுள்ளார்.
படத்திற்கு “லவ்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. தலைப்பை பார்த்த ரசிகர்கள் பரத் ஹீரோவாக அறிமுகமான படத்திற்கு பெயர் “காதல்”. தற்போது அவரது 50-வது படம் “லவ்” என கூறிவருகிறார்கள்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…