பொய் சொல்லாதீங்க! உத்தம வில்லன் நஷ்டம் தான்..லிங்குசாமி நிறுவனம் விளக்கம்!
Uttama Villain : உத்தம வில்லன் படம் தோல்வி படம் தான் என லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனம் திருப்பதி பிரதர்ஸ் விளக்கம் கொடுத்துள்ளது.
இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனம் திருப்பதி பிரதர்ஸ் நடிகர் கமல்ஹாசனை வைத்து உத்தம வில்லன் என்ற படத்தை தயாரித்து இருந்தது. இந்த உத்தம வில்லன் திரைப்படத்தினை ரமேஷ் அரவிந்த் என்பவர் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் கடந்த 2015-ஆம் ஆண்டு மே 2-ஆம் தேதி வெளியானது.
பெரிய எதிர்பார்ப்புகளை எகிற வைத்த இந்த திரைப்படம் வசூல் ரீதியாக சரியான லாபத்தை ஈட்டமுடியவில்லை என்ற காரணத்தால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பெரிய நஷ்டத்தை சந்தித்தது என்றே கூறலாம். இந்த நிலையில், பிரபல யூடியூப் சேனல் ஒன்று உத்தம வில்லன் மிகப்பெரிய லாபகரமான படம் என்று இயக்குனர்லிங்குசாமி கூறியதாக பொய்யான தகவல் ஒன்றை பரப்பி உள்ளனர்.
இதற்கு அப்படி லிங்கு சாமி எந்த பேட்டியிலும் கூறவில்லை என்றும் உத்தம வில்லன் திரைப்படம் உண்மையில் நஷ்டம் கொடுத்த படம் தான் எனவும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது. உத்தம வில்லன் படத்தை FIRST COPY (முதல் பிரதி) அடிப்படையில் தான் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்ததாம்.
“உத்தம வில்லன்” எங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தையும், நிதி நெருக்கடியையும், ஏற்படுத்திய படம் எனவும், கமல்ஹாசனுக்கு இந்த விஷயம் நன்றாக தெரியும் எனவும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. அதை போல, நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக கமல்ஹாசன் எங்கள் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு படம் நடித்து தயாரித்து தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர்.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் சமூக வலைத்தளமான “வலை பேச்சு” என்கிற YOUTUBE சேனலில் உத்தம வில்லன் மிகப்பெரிய லாபகரமான படம் என்ற பொய்யான தகவலை பரப்பி இருக்கிறது இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற தவறான பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் எனவும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
A clarification about #Uthamavillian pic.twitter.com/6CURcEMPBv
— Thirrupathi Brothers (@ThirrupathiBros) April 17, 2024