கவலை படாதீங்க! ‘அஞ்சான்’ வருது…அதுவும் ரீ எடிட்…லிங்கு சாமி சொன்ன அதிர்ச்சி தகவல்!
Anjan Re Release : அஞ்சான் திரைப்படம் ரீ எடிட் செய்யப்பட்டு விரைவில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என லிங்கு சாமி அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் எத்தனையோ திரைப்படங்கள் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்து தோல்வியை தழுவி இருக்கிறது. அப்படி தான் லிங்கு சாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான அஞ்சான் படமும் கூட. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்திருந்தார். படத்தில் வித்யுத் ஜம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி, முரளி சர்மா, தலிப் தஹில் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.
இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு படத்தின் ட்ரைலரில் பல மாஸ் காட்சிகளை காட்டி படம் அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என ப்ரோமோஷன் செய்து கடைசியில் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை என்ற காரணத்தால் படம் சுமாரான வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. படம் தோல்வியை சந்தித்தாலும் இந்த படம் சூர்யா ரசிகர்கள் சிலருக்கும் இன்னுமே இந்த படம் பிடித்த படமாக இருக்கிறது என்று கூட சொல்லலாம்.
ஏற்கனவே, பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி தோல்வி அடைந்து இருக்கும் இந்த படம் மீண்டும் ரீ-எடிட் செய்யப்படவுள்ளதாம். இப்போது படங்களை ரீ-ரிலீஸ் செய்வது என்பது ஒரு ட்ரெண்ட் ஆன விஷயமாகவே மாறிவிட்டது. அப்படி தான் தற்போது அஞ்சான் படத்தை மீண்டும் ரீ -எடிட் செய்து லிங்கு சாமி படத்தை ரீ-ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு ஒரு சில ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து இருந்தாலும் ஒரு சில ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக வெளியான தகவலை பார்த்த அவர்கள் ஏற்கனவே இப்படி பில்டப் செஞ்சு தான் படம் பிளாப் ஆச்சு திரும்பவும் இப்படியா? என்பது போல கூறி வருகிறார்கள்.