பார்பி கேர்ள் லுக்கில் கீர்த்தி ஷெட்டி .. கலக்கும் LIK ஸ்டைலிஷ் போஸ்டர்.!

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி : இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் LIC என இருந்த படத்தின் தலைப்பை சமீபத்தில் LIK (Love Insurance Kompany) என மாற்றப்பட்டது.
பிரதீப் ரங்கநாதன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இடம்பெறும் படத்தின் இரண்டு கலர்ஃபுல் போஸ்டர்களை தயாரிப்பாளர்கள் ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில், தற்போது படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை கிருத்தி ஷெட்டியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
கிருத்தி ஷெட்டியின் நகைச்சுவையான அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், அவர் ஸ்டைலான சில்வர் சில்வர் நிற உடையில், ட்ரான்ஸ்ப்ரண்ட் மொபைலை வைத்திருக்கும்படி போஸ்டர் அமைந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பார்பி கேர்ள் லுக்கில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Here is @IamKrithiShetty #LoveInsuranceKompany #LIK
@VigneshShivN @pradeeponelife@iam_SJSuryah @anirudhofficial pic.twitter.com/eVoz50BkaE
— Seven Screen Studio (@7screenstudio) August 2, 2024
நடிகைக்கு பின்னால் இருக்கும் டிஜிட்டல் கடிகாரம் 2035 ஆம் ஆண்டைக் காட்டுகிறது, எதிர்காலத்தை மனதில் வைத்து இந்த படத்தின் கதை அமைந்திருக்கலாம். ஏற்கனவே, வெளியான பிரதீப் ரங்கநாதன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் போஸ்டர் டிஜிட்டல் உலகை காட்டியது குறிப்பிடத்தக்கது.
#LIK – All Posters Looks awesome ????
And it is designed by our Aesthetic Kunjamma ????????#LoveInsuranceKompany pic.twitter.com/pjsLSkYQ2m
— ⚡️ABHI⚡️ (@theAbhiOffl) August 2, 2024
இப்படத்தில் பிரதீப் மற்றும் எஸ்.ஜே.சூர்யா தவிர, யோகி பாபு காமெடியனாக நடிக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். வெளியீட்டு தேதி பற்றிய கூடுதல் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
March 29, 2025
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
March 29, 2025