லைட்ஸ்..கேமரா..ஆக்சன்!! ‘தலைவர் 170’ படப்பிடிப்பு தொடக்கம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக ‘ஜெயிலர்’ என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தை வழங்கியதை தொடர்ந்து, தற்போது தன்னுடைய 170-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலியமாக ‘தலைவர் 170’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை ‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்க, லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர்களான லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழுவினரின் விவரங்களை கடந்த மூன்று தினங்களாக வெளியிட்டு வந்தனர். ரஜினிகாந்த் ரசிகர்கள் கடந்த மூன்று நாட்களாக அப்டேட் மழையில் நனைந்தனர்.
ஏற்கனவே, வெளியான தகவலின்படி, இன்று இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக ரஜினியின் போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், படப்பிடிப்பு முடிந்ததும், மேலும் பல அப்டேட்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு பான் இந்தியன் படமாக உருவாகவுள்ள நிலையில், படக்குழு அறிவித்த தகவலின்படி, இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாள நடிகர் பகத் பாசில், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் நடிக்கின்றனர்.
தலைவர் 170 படத்தை தொடர்ந்து, ரஜினிகாந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தலைவர் 171’ படத்தில் நடிக்கவுள்ளார். 2024 பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் லால் சலாம் படத்தில் கேமியோ தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.