என் சொத்தை வித்துவிட்டேன்…ஜெயிலரால் வாழ்க்கை போய்விடும் – கதறும் இயக்குனர்!
ஜெயிலர் திரைப்படத்தை ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியிடுவதற்கான ப்ரோமோஷன் வேலைகள் நடந்துவருகின்றன. இதற்கிடையில், ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் டைட்டிலில் சர்ச்சை எழுந்தது.
அதாவது, மலையாளத்தில் சக்கீர் மடத்தில் இயக்கத்தில் தயன் ஸ்ரீநிவாசன் நடிப்பில் ‘ஜெயிலர்’ என்ற படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்காக ஜெயிலர் என்ற தலைப்பை ரஜினி படத்துக்கு முன்னரே பதிவு செய்யப்பட்டுள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, ஏற்கனவே மலையாள இயக்குனர் சக்கீர் மடத்தில் முதலில் நாங்கள் ‘ஜெயிலர்’ என்ற பெயரை பதிவு செய்ததாக ரஜினி நடிக்கும் ஜெயிலர் படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், நாங்கள் 21 ஆகஸ்ட் 2021 அன்று ‘ஜெயிலர்’ என்ற பெயரை கேரள ஃபிலிம் சேம்பரில் பதிவு செய்துள்ளோம்.
ஆனால், 2022-ல் தான் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தைப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் கேரளாவிலாவது எங்கள் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று அந்த நோட்டீஸில் கேட்டு கொண்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது, அந்த இயக்குனர் மிகவும் உருக்கமாக பேசியிருக்கிறார். ஜெய்லர் தயாரிக்க மொத்தம் 5 கோடி ரூபாய் செலவானது. எனது வீடு, நகை, கார் என அனைத்தையும் விற்றுவிட்டேன். மேலும், வங்கியில் கடன் வாங்கியுள்ளேன், வெளியிலிருந்தும் கடன் பெற்றுள்ளேன், வட்டி கட்டுவது கடினம். இப்படிதான் ஜெயிலர் திரைப்படத்தை எடுத்திருக்கிறேன்.
தயவு செய்து தமிழ் ஜெயிலரின் பெயரை கேரளாவில் மாற்றுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார். ரஜினிகாந்த் நல்ல மனிதர், என் கஷ்டத்தை அவர் புரிந்துகொள்வார். எனது எதிர்காலம் ‘ஜெயிலர்’ படத்தில் தான் உள்ளது என்று மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். ஆனால், தமிழ் ஜெயிலர் படக்குழு அதனை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.