தமிழ் சினிமாவில் 23-ஆம் புலிகேசி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் சிம்புதேவன். இந்த படத்திற்கு பிறகு அறை என் 305-இல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் ஆகிய படங்களை இயக்கி இருந்தார். இந்த படங்களை எல்லாம் தொடர்ந்து அவர் நடிகர் விஜய்யை வைத்து புலி திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியானது. எதிர்பார்ப்புகளை மட்டுமே எகிற வைத்து வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக அட்டர் பிளாப் ஆனது. படம் கார்டூன் படம் போன்ற வகையில் எடுக்கப்பட்டு இருந்ததாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், படம் தோல்வியை சந்தித்தது.
ஹிந்தியிலும் மாஸ் காட்டும் யோகி பாபு! ‘போட்’ படத்தின் வியாபாரம்!
பொதுவாகவே சில இயக்குனர்கள் இப்படி தோல்வி படங்கள் கொடுத்தால் அடுத்ததாக தங்களுடைய படங்களை இயக்க சில காலங்கள் ஆகும். ஏனென்றால், அந்த தோல்விக்கு பிறகு சில காலங்கள் எடுத்துக்கொண்டு தான் அடுத்ததாக படங்களை இயக்குவார்கள். ஆனால், சிம்பு தேவன் கதையில் அவர் படம் எடுக்க நீண்ட ஆண்டுகள் ஆகிவிட்டது. ஏனென்றால், புலி படத்தின் தோல்விக்கு பிறகு சிம்பு தேவன் கடந்த 8 வருடமாக எந்த படங்களையும் இயக்கவில்லை.
8 ஆண்டுகளுக்கு பிறகு தான் தற்போது நடிகர் யோகி பாபுவை வைத்து போட் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பு கடந்த ஆண்டு கசட தபரா எனும் வெப் தொடரை மட்டும் இயக்கி இருந்தார். படமாக வைத்து பார்க்கையில் இந்த போட் திரைப்படத்தை தான் அவர் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இயக்கியுள்ளார்.
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சிம்புதேவன் ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ள காரணத்தால் இந்த திரைப்படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. விஜய் படத்தால் 8 வருடம் முடங்கிய சூப்பர் ஹிட் இயக்குனர் போட் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்கு கப்பலேறி வந்து சேருவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இந்த போட் திரைப்படத்தில் நடிகர் யோகி பாபுடன் கௌரி ஜி கிஷன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…