விஜய் படத்தால் 8 வருடம் முடங்கிய சூப்பர் ஹிட் இயக்குனர்.!கப்பலேறி வந்து சேருவாரா?

Chimbu Deven

தமிழ் சினிமாவில் 23-ஆம் புலிகேசி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் சிம்புதேவன். இந்த படத்திற்கு பிறகு அறை என் 305-இல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் ஆகிய படங்களை இயக்கி இருந்தார். இந்த படங்களை எல்லாம் தொடர்ந்து அவர் நடிகர் விஜய்யை வைத்து புலி திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியானது. எதிர்பார்ப்புகளை மட்டுமே எகிற வைத்து வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக அட்டர் பிளாப் ஆனது. படம் கார்டூன் படம் போன்ற வகையில் எடுக்கப்பட்டு இருந்ததாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், படம் தோல்வியை சந்தித்தது.

ஹிந்தியிலும் மாஸ் காட்டும் யோகி பாபு! ‘போட்’ படத்தின் வியாபாரம்!

பொதுவாகவே சில இயக்குனர்கள் இப்படி தோல்வி படங்கள் கொடுத்தால் அடுத்ததாக தங்களுடைய படங்களை இயக்க சில காலங்கள் ஆகும். ஏனென்றால், அந்த தோல்விக்கு பிறகு சில காலங்கள் எடுத்துக்கொண்டு தான் அடுத்ததாக படங்களை இயக்குவார்கள். ஆனால், சிம்பு தேவன் கதையில் அவர் படம் எடுக்க நீண்ட ஆண்டுகள் ஆகிவிட்டது. ஏனென்றால், புலி படத்தின் தோல்விக்கு பிறகு சிம்பு தேவன் கடந்த 8 வருடமாக எந்த படங்களையும் இயக்கவில்லை.

8 ஆண்டுகளுக்கு பிறகு தான் தற்போது நடிகர் யோகி பாபுவை வைத்து போட் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பு கடந்த ஆண்டு கசட தபரா எனும் வெப் தொடரை மட்டும் இயக்கி இருந்தார். படமாக வைத்து பார்க்கையில் இந்த போட் திரைப்படத்தை தான் அவர் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இயக்கியுள்ளார்.

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சிம்புதேவன் ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ள காரணத்தால் இந்த திரைப்படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. விஜய் படத்தால் 8 வருடம் முடங்கிய சூப்பர் ஹிட் இயக்குனர் போட் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்கு கப்பலேறி வந்து சேருவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.  இந்த போட் திரைப்படத்தில் நடிகர் யோகி பாபுடன் கௌரி ஜி கிஷன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்