போடு தகிட தகிட…சண்டை ஆரம்பம்! ரஞ்சித்துடன் மோதும் ரவீந்தர்!
பிக் பாஸ் வீட்டிற்குள் ரஞ்சித் மற்றும் ரவீந்தர் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ள புரோமோவை விஜய் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது

சென்னை : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி சாதாரணமாக சென்று கொண்டு இருக்கிறது எப்போது சண்டை ஏற்பட்டு போட்டி விறு விறுப்பாக பலரும் காத்திருந்த நிலையில், அது நிகழ்ச்சி தொடங்கி 3 நாட்களிலே நடந்திருக்கிறது. ஒரு சண்டை இல்லை இரண்டு சண்டைகள் நடந்து பிக் பாஸ் வீடு ரணகளமாக மாறியிருக்கிறது. முதல் சண்டையாக இன்று காலை பவித்ரா, விஜே விஷால் சண்டை வெடித்தது.
அதனைத்தொடர்ந்து, ரஞ்சித் மற்றும் ரவீந்தர் இருவருக்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டுள்ள ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியீட்டு இருக்கிறது. இருவருக்கும் இடையே என்ன காரணத்துக்காக பிரச்சினை வந்தது என்று தெரியவில்லை. ஆனால், இருவரும் கடுமையான கோபத்தில் அடி தடி வரை செல்லும் அளவுக்கு வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதலில் இருவருக்கும் இடையே நடந்த பிரச்சினை காரணமாக ரவீந்தர் ” நீ தேவை இல்லாமல் பேசுகிறாய் ” என்பது போல ரஞ்சித்திடம் சொல்கிறார். அதற்கு கோபப்பட்ட ரஞ்சித் ” நான் என்ன தேவை இல்லாமல் பேசுகிறேன்? என கோபத்துடன் கேட்கிறார். இதனால் வாக்கு வாதம் முற்றிய நிலையில், வீட்டில் இருந்த சக போட்டியாளர்கள் இருவரும் தடுத்து சண்டை வராமல் பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
அப்போது, ரஞ்சித் அங்கிருந்த பெண் போட்டியாளர் ஒருவரிடமும் கோபத்தோடு பேசியதாக தெரிகிறது. எனவே, இந்த பிரச்சினையில் அந்த பொண்ணை என் மிரட்டுறீங்க? என ரஞ்சித்திடம் ரவீந்தர் கோபமாக கேட்க மீண்டும் வாக்கு வாதம் பெரிதாக வெடித்தது. இது பிக் பாஸ் வீடு வேறு பாஸ் வீடு இல்லை என ரவீந்தர் கையை நீட்டி பேசினார்.
உடனே ரஞ்சித் முதலில் நீ கையை கீழே போட்டு பேசு என கூற வாக்கு வாதம் பெரிதாக இருவரும் மோதிக்கொள்ளும் அளவுக்கு பிரச்சினை ஆகிவிட்டது. சக போட்டியாளர்கள் தனி தனியாக பிரிந்து இருவரையும் இழுத்து சென்றார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படியான பரபரப்பு சம்பவங்கள் தான் வேடிக்கையாக இருக்கும். எனவே, சண்டை வெடித்துள்ளதை பார்த்த ரசிகர்கள் போடு தகிட தகிட…சண்டை ஆரம்பம் எனக் கூறி வருகிறார்கள்.
போடு ரஞ்சித் Vs ரவீந்தர் ????????????
அதுக்குள்ள அடிதடியா ????????#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil8 #BiggBossTamilSeason8
pic.twitter.com/ojEkH5VKRT— ???????????????????? ???????????????????? (@shakila_sweety) October 9, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025