சினிமா

லவ் பண்ணுங்க யா பார்ப்போம் ! பிரதீப்பின் அடுத்த அட்டாக் அவர் தான்!

Published by
பால முருகன்

வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டைக்கு பஞ்சமே இருக்காது என்றே கூறலாம். ஏனென்றால், நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரத்தில் பயங்கரமாக சண்டைகள் வாக்கு வாதம் நடைபெறும். ஆனால், இந்த 7-வது சீசனில் அடிக்கடி சண்டை நடக்காமல் அவ்வபோது சண்டைகள் நடைபெற்று வருகிறது.

இதில் பலமுறை பல போட்டியாளர்களிடம் வாயை கொடுத்து மாட்டிக்கொள்வது பிரதீப் தான். குறிப்பாக நேற்று நிக்சன் உடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அதற்கும் முன்னதாக விசித்ராவிடம் விளையாடி அவரிடமும் வாங்கிக்கட்டி கொண்டார். இந்த நிலையில், இவர்களை தொடர்ந்து அடுத்தாக பிரதீப் ரவீனாவை டார்கெட் செய்துள்ளார்.

ரவீனா வெளிய அமர்ந்துகொண்டிருந்த போது அவரை நோக்கி மணி சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பார்த்த பிரதீப் என்னடா லவ் கன்டென்ட் எல்லாம் கொடுக்குறீங்களா? கேள்வி பட்டேன் என கேட்டார். அதற்க்கு மணி நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூற அதற்கு பிரதீப் அப்போ இப்போது ப்ரண்ட்ஷிப் கன்டென்ட் கொடுக்குறீங்களா என கேட்டுள்ளார்.

பிறகு லவ் பண்ணுங்க டா பார்ப்போம் வித்தியாசமாகி இருக்கும் என பிரதீப் கூறினார். இதனால் சற்று அதிர்ச்சியான மணி திரும்பி பார்த்தார் பிறகு அப்படியே பிரதீப் பேச்சை மாற்றினார். இதனை கண்ட விசித்ரா தனிப்பட்ட விஷயங்களை பற்றி பேசாதா பிரச்சனை ஆகிடும் என்று கூறினார்.  பிறகு மணி ரவீனாவிடம் சாரி என்னால தான் சாரி மன்னிச்சுரு என்று கேட்கிறார்.

இருந்து பிரதீப் விடாமல் ரவீனாவை மணியை வைத்து கலாய்த்த காரணத்தால் சற்று வேதனை அடைந்தார். ஒரு கட்டத்தில் கண் கலங்க ரவீனாவுக்கு மணி ஆறுதலை தெரிவித்துவிட்டு சென்றார். பிறகு ரவீனா எந்த பிரச்சனையும் இல்லை மணியை நான் சும்மா தான் கட்டிப்பிச்சேன் நாளைக்கு நீயும் வா மச்சான் உன்னையும் கட்டிபுடிக்கிறேன் என ரவீனா கூற இப்போவே வா என்று கூற பிரதீப் கூறினார்.

பிறகு ரவீனா வீட்டிற்குள் சென்றுவிட்டார் பிரதீப் விசித்ராவிடம் இது சும்மா ஜாலிக்காக பேசினேன் ஜாலியாக மாற்றவில்லை என்றால் சீரியஸ் ஆகிரும் என்று கூறினார். அதற்க்கு விசித்ரா ஜாலிக்கு என்றாலும் இப்படி செய்யக்கூடாது என கூறினார். தொடர்ச்சியாக ரசிகர்களுக்கு எரிச்சல் ஊட்டும் விதமாக பிரதீப் செய்துவருவதால் அவரை சமூக வலைத்தளங்களில் தீட்டி தீர்த்து வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

49 minutes ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

1 hour ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

3 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

5 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

6 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

6 hours ago