வரட்டும் நம்ம நண்பர் படம் தானே.. “துணிவு” வெற்றிக்கு வாழ்த்திய விஜய்.!
சினிமாவில் அஜித் விஜய்க்கு போட்டி இருந்தாலும் நிஜத்தில் இவர்கள் இருவருமே நல்ல நண்பர்கள் தான். ஆனால், இவர்களது ரசிகர்கள் தான் எப்போது சமூக வளைதளங்களில் சண்டைபோட்டுக்கொண்டே வருகிறார்கள். மேலும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதனால் இரண்டு படங்களில் எந்த படம் அதிகம் வசூல் செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழும்பியுள்ளது. கோலிவுட் சினிமாவில் மிகப்பெரிய படங்களின் மோதல் இது என்பதால் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் இரண்டு படங்களையும் பார்க்க காத்துள்ளனர்.
இதையும் படியுங்களேன்- முதலில் “வாரிசு” படத்தை தான் பார்ப்பேன்.! “துணிவு” இயக்குனர் நச் பதில்…
இந்நிலையில், வாரிசு படத்துடன் துணிவு படம் வெளியாகும் தகவலை விஜய் கேட்டுவிட்டு என்ன சொன்னார் என்ற தகவலை வாரிசு படத்தில் நடித்த நடிகர் ஷாம் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் விஜய் அண்ணாவிடம் கால் செய்து அண்ணா துணிவு படமும் பொங்கலுக்கு வருவது உறுதி என்று சொன்னேன்.
அதற்கு விஜய் அண்ணன் ” ஏய் ஜாலிபா வரட்டும் பா நம்ம நண்பர் தானா அந்த படமும் நல்லா போகட்டும் நம்ம படமும் நல்லா போகட்டும்” என்று கூறியுள்ளார். இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் தளபதி விஜய் நம்பர் 1-ஆக இருப்பதற்கான காரணம் இப்படி பட்ட நல்ல குணம் தான் என கூறி வருகிறார்கள்.