தமிழகத்தின் ‘நாளைய தீர்ப்பு’ விஜய் ஆக இருக்கட்டும் – மன்சூர் அலிகான் பரபர பேச்சு!
லியோ வெற்றி விழாவில் பங்கேற்ற நடிகர் மன்சூர் அலி கான் தமிழகத்தின் நாளைய தீர்ப்புக்கு வாழ்த்துக்கள் என்று கூறியது அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் உலகம் முழுவதும் உலக அளவில் ரூ.540 கோடி வசூல் செய்து திரையரங்குகளில் இன்றும் ஓடுகிறது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், ‘லியோ’ படத்தின் வெற்றி விழா, நேற்று (நவம்பர் 1) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதில், விஜய், த்ரிஷா, லோகேஷ் அர்ஜுன் சர்ஜா, மடோனா செபாஸ்டியன், ஜார்ஜ் மேரியன், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலி கான், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்து பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இதனையடுத்து, மேடையில் விஜய் தனது குட்டி ஸ்டோரியை எடுத்து விட்டது போல், படத்தில் நடித்த நடிகை நடிகர்களும் மேடை ஏறி பேசினர். அப்படி நடிகர் மன்சூர் அலி கானும் அரங்கத்தை ஆரவாரம் செய்தார். படத்தில் நடித்த நடிகர்கள் பற்றி பேசி முடித்த பின், விஜய் பற்றி பேசிய அவர் அவரது அரசியல் பற்றியும் வெளிப்படுத்தினார். இதற்கு ரசிகர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பினர்.
இவ்ளோ கோவம்லாம் உடம்புக்கு நல்லதில்ல – ரசிகர்களுக்கு விஜய் கொடுத்த அட்வைஸ்!
நாளைய தீர்ப்பு – மன்சூர் அலிகான்
‘லியோ’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய மன்சூர் அலிகான், தமிழகத்தின் ‘நாளைய தீர்ப்பு’ விஜய்யாக இருக்க வாழ்த்துகள் என நடிகர் மன்சூர் அலிகான் சூசகமாக பேசியுள்ளார். உங்களை நம்பிதான் நாடு இருக்கு, நாளைய தீர்ப்பை எழுத தயாராகுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்த கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினி.. தல அஜித்.! மேடையில் சர்ப்ரைஸ் கொடுத்த தளபதி விஜய்.!
நெஞ்சில் குடியிருக்கும் தளபதி ரசிகர்களுக்கு வணக்கம் லியோ படத்தில் நானும், விஜய் தம்பியும் தம் அடிப்போம், குடிப்போம். அதுலாம் சும்மா பொய். அதெல்லாம் படத்திற்காக தான். தவறான பழக்கத்திற்கு அடிமையாகாதீர்கள் என்று அறிவுரை கூறினார்.
‘நாளைய தீர்ப்பு’ விஜய்யாக இருக்க வேண்டும் என்று சொன்னது விஜய்யின் அரசியல் வருகை பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது. அண்மைய காலமாக விஜய்யின் நகர்வுகளும் அதன் அடித்தளமாகவே அமைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய தீர்ப்பு
1992ஆம் ஆண்டில் ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான விஜய் இன்று தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக திகல்கிறார். இந்த படத்தை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியது குறிப்பிடத்தக்கது.