8 அதிகாரிகளுக்கு மரண தண்டனை! ஒற்றுமையுடன் போராடி மீட்போம் – ஜி.வி.பிரகாஷ் பதிவு!

gv prakash

கத்தாரில் பணிபுரிந்து வந்த 8 இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து நிலையில், இது குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வளைத்தபக்கத்தில் இந்திய அரசுக்கு துணை நிற்போம் என பதிவிட்டுள்ளார்.

கத்தாரில் உள்ள ‘தஹ்ராகுளோபல் டெக்னாலஜிஸ் அண்ட் கன்சல்டென்சி சர்வீசஸ்’ என்ற நிறுவனத்தில், இந்திய கடற்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 8 அதிகாரிகள் பணிபுரிந்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த வருடம், கத்தார் அரசு இந்திய கடற்படையில் உயர்பொறுப்பு வகித்து ஓய்வு பெற்ற 8 முன்னாள் அதிகாரிகளை இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில், கைது செய்து சிறையில் அடைத்தது. இதனையடுத்து, இந்த 8 அதிகாரிகளுக்கும் கத்தார் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கத்தாரில் 8 முன்னாள் இந்திய கடற்படைஅதிகாரிகளுக்கு தூக்குத்தண்டனை..! கண்டனம் தெரிவிக்கும் இந்திய அரசியல் தலைவர்கள்..!

கத்தார் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்இந்த தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாகவும், தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டுள்ளதாகவும், தண்டனை விதிக்கப்பட்டவர்களை மீட்பது தொடர்பாக சட்டப்பூர்வமாக ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது X தள பக்கத்தில், “நமக்காக இரவு பகல் பாராது உழைத்த நமது கடற்படை வீரர்கள் 8 பேரையும், தாயகத்திற்கு பத்திரமாக மீட்டுக்கொண்டு வர வேண்டும். அதற்காக நம் இந்திய அரசு எடுக்கும் அத்தனை முயற்சிகளுக்கும் துணை நிற்போம், ஒற்றுமையுடன் போராடி நம் வீரர்களை மீட்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்