விஜய் ரசிகர்கள் அனைவரும் வாரிசு திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். இந்த படத்திலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ரஞ்சிதமே பாடல் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து படத்தின் ட்ரைலர் மற்றும் அடுத்த பாடல் வெளியாகும் தேதி குறித்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள்.
இதனையடுத்து, விஜய் சினிமாவிற்குள் நடிக்க வந்து வரும் டிசம்பர் 4-ஆம் தேதி 30 ஆண்டுகள் நிறைவடைவதை யொட்டி “வாரிசு” படத்தின் புது அப்டேட் ஒன்று இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் வீடியோ வெளியீட்டு அறிவித்திருந்தது.
அதன்படி தற்போது அந்த அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், வாரிசு படத்தின் ” தீ தளபதி ” எனும் இரண்டாவது பாடல் டிசம்பர் 4-ஆம் தேதி 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.
மேலும் இந்த வாரிசு திரைப்படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார். படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ்.இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் ராஷ்மிகா, சங்கீதா கிரிஷ், சரத்குமார், ஷாம் , பிரகாஷ் ராஜ், சம்யுக்தா கார்த்திக், ஜெயசுதா, யோகி பாபு, சம்யுக்தா சண்முகநாதன் ஆகியோர் நடித்துள்ளார்கள். படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…