இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான டிரைலர் வெளியீடப்பட்டது. டிரைலரில் வந்த ஒவ்வொரு காட்சிகளும் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். கண்டிப்பாக லியோ திரைப்படம் lCU-வில் இருக்குமா இல்லையா என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் டிரைலரை வைத்து பார்க்கையில் படம் lcu-வில் இருப்பதற்கான குறியீடு பெரிதாக இல்லை.
டிரைலர் தொடங்கும்போது நடிகர் விஜய் ஒரு கதையை கூறுகிறார். அந்த கதை என்னவென்றால், ஒரு சீரியல் கில்லர் எல்லாரையும் சுட்டுக்கொள்கிறான். அந்த சீரியல் கில்லராக சாண்டி மாஸ்டர் காட்டப்படுகிறார். பிறகு அந்த சீரியல் கில்லரை கொள்வதற்கு சிங்கம் மாதிரி ஒரு காவல் அதிகாரி வருகிறார். அந்த காவல் அதிகாரியாக கெளதம் மேனன் தான். பிறகு அந்த சீரியல் கில்லர் அந்த போலீஸ் அதிகாரியையும் சுட்டு கொள்கிறான்.
இந்த கதையை நடிகர் விஜய் மேத்யூ தாமஸிடம் கூறுவது போல ட்ரைலரில் கட்டப்பட்டுள்ளது. ஆனால், மற்றோரு பிரேமில் விஜய் தன்னை மீடியாக்கள் புகைப்படம் எடுக்கும்போது முகத்தை மறைத்து கொண்டே வருவார். அதற்கு பின்பு விஜையையின் மகளை மேத்யூ தாமஸ் தூக்கி கொண்டு வருவார். எனவே, படம் பார்த்தால் தான் அவர் யார் எந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது தெரிய வரும்.
டிரைலரை வைத்து பார்க்கையில் விஜய் லியோ – பார்த்தி என இரண்டு வேடங்களில் நடித்திருப்பதாக தெரிகிறது. முதலில் லியோ எதோ பெரிதாக சம்பவம் செய்துவிட்டு போகிறார். அதற்கு லியோ போலவே இருக்கும் பார்த்தி தான் லியோ என நினைத்து அவரை கொலை செய்யவேண்டும் என சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் இருவரும் தங்களுடைய ஆட்களை வைத்து முயற்சி செய்கிறார்கள்.
தமிழ் முதல் ஹிந்தி வரை அதிரடி! ‘லியோ’ டிரைலர் செய்த தரமான சம்பவம்!
குடும்பத்துடன் காஸ்மீரில் வாழ்ந்துகொண்டிருக்கும் பார்த்தியை கொலை செய்ய பலரும் திட்டமிட்டு அவருடன் மோதலில் ஈடுபடுகிறார்கள். பொறுத்து பொறுத்து போய் கொண்டு இருக்கும் பார்த்தி ஒரு கட்டத்திற்கு மேல் தன்னுடைய குடும்பத்தின் மீது அவர்கள் கை வைக்க சினம் கொண்ட சிங்கமாக மாறி அனைவரையும் திருப்பி அடிக்க தொடங்குகிறார்.
ஒரு காட்சியில் மிகவும் மன வேதனையுடன் கெட்ட வார்தையில் பேசிக்கொண்டு இருப்பார். அகில் இருந்து தான் தன்னை கொள்ள வருபவர்களை வெறி கொண்ட வேங்கையாக மாறி பிரச்னையில் இருந்து தப்பிக்க திருப்பி அடிக்கிறார். லியோ கதாபாத்திரமாக வரும் விஜய் இரண்டாவது பாதியில் இருந்து தான் வருவார் என தெரிகிறது.
ஏனென்றால், லியோ காதாபாத்திரத்தில் வரும் விஜய் ட்ரைலரின் இரண்டு காட்சியில் மட்டும் தான் வருகிறார். மேலும், விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்காரா அல்லது படத்தில் இரண்டு விஜயா என தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் குழம்பி போய் இருக்கிறார்கள். அவர்களுடைய குழப்பத்திற்கு படம் வெளியான பிறகு தான் பதில் கிடைக்கும். ட்ரைலரை வைத்து பார்க்கையில், சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் இருவரும் ஒரே கேங்கில் இருப்பவர்களாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது ஏனென்றால், ட்ரைலரின் ஒரு காட்சியில் சாண்டியின் விரலை அர்ஜுன் வெட்டி எடுப்பார்.
அந்த காட்சியில் பாபு ஆண்டனி இருப்பார். அதைப்போலவே மற்றோரு காட்சியில் சஞ்சய் தத் வரும் காட்சியிலும் பாபு ஆண்டனி இருப்பார். எனவே, இதனை வைத்து பார்க்கையில், கண்டிப்பாக இவர்கள் இருவரும் படத்திற்கு வில்லனாக இருக்கலாம் என தெரிகிறது. கைதி மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் LCU-வில் இணைந்தது போல லியோ திரைப்படமும் இணையும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள்.
ஆனால், டிரைலரில் வரும் ஒரு காட்சியில் கூட படம் LCU-வில் இணையும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதைப்போல தான் விக்ரம் படத்தின் ட்ரைலரில் கூட LCU-வில் இணைவதாக காட்டவில்லை கடைசியாக ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் கொடுக்கும் வகையில், லோகேஷ் கைதி டில்லையை பற்றி பேசும் காட்சிகளை வைத்திருந்தார். எனவே லியோ திரைப்படமும் அந்த LCU-வில் இணையுமா இல்லையா என்பதற்கு வரும் அக்டோபர் 19-ஆம் தேதி விடைகிடைத்துவிடும்.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…