LEOTrailerDecoding : லியோ & பார்த்தி வெவ்வேறு ஆட்களா ? டிரைலரில் இதயெல்லாம் கவனித்தீர்களா?

LEO Official Trailer Decoding

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான டிரைலர் வெளியீடப்பட்டது. டிரைலரில் வந்த ஒவ்வொரு காட்சிகளும் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். கண்டிப்பாக லியோ திரைப்படம் lCU-வில் இருக்குமா இல்லையா என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் டிரைலரை வைத்து பார்க்கையில் படம் lcu-வில் இருப்பதற்கான குறியீடு பெரிதாக இல்லை.

Leo Movie Trailer
Leo Movie Trailer twitter /@yoursthelegend

டிரைலர் தொடங்கும்போது நடிகர் விஜய் ஒரு கதையை கூறுகிறார். அந்த கதை என்னவென்றால், ஒரு சீரியல் கில்லர் எல்லாரையும் சுட்டுக்கொள்கிறான். அந்த சீரியல் கில்லராக சாண்டி மாஸ்டர் காட்டப்படுகிறார். பிறகு அந்த சீரியல் கில்லரை கொள்வதற்கு சிங்கம் மாதிரி ஒரு காவல் அதிகாரி வருகிறார். அந்த காவல் அதிகாரியாக கெளதம் மேனன் தான். பிறகு அந்த சீரியல் கில்லர் அந்த போலீஸ் அதிகாரியையும் சுட்டு கொள்கிறான்.

Sandy
Sandy [file image]

இந்த கதையை நடிகர் விஜய் மேத்யூ தாமஸிடம் கூறுவது போல ட்ரைலரில் கட்டப்பட்டுள்ளது. ஆனால், மற்றோரு பிரேமில் விஜய் தன்னை மீடியாக்கள் புகைப்படம் எடுக்கும்போது முகத்தை மறைத்து கொண்டே வருவார். அதற்கு பின்பு விஜையையின் மகளை மேத்யூ தாமஸ் தூக்கி கொண்டு வருவார்.  எனவே, படம் பார்த்தால் தான் அவர் யார் எந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது தெரிய வரும்.

LEOTrailerDecoding
LEOTrailerDecoding [file image]

டிரைலரை வைத்து பார்க்கையில்  விஜய் லியோ – பார்த்தி என  இரண்டு வேடங்களில் நடித்திருப்பதாக தெரிகிறது. முதலில் லியோ எதோ பெரிதாக சம்பவம் செய்துவிட்டு போகிறார். அதற்கு லியோ போலவே இருக்கும் பார்த்தி தான் லியோ என நினைத்து அவரை  கொலை செய்யவேண்டும் என சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் இருவரும் தங்களுடைய ஆட்களை வைத்து முயற்சி செய்கிறார்கள்.

தமிழ் முதல் ஹிந்தி வரை அதிரடி! ‘லியோ’ டிரைலர் செய்த தரமான சம்பவம்!

குடும்பத்துடன் காஸ்மீரில் வாழ்ந்துகொண்டிருக்கும் பார்த்தியை கொலை செய்ய பலரும் திட்டமிட்டு அவருடன் மோதலில் ஈடுபடுகிறார்கள். பொறுத்து பொறுத்து போய் கொண்டு இருக்கும் பார்த்தி  ஒரு கட்டத்திற்கு மேல் தன்னுடைய குடும்பத்தின் மீது அவர்கள் கை வைக்க சினம் கொண்ட சிங்கமாக மாறி அனைவரையும் திருப்பி அடிக்க தொடங்குகிறார்.

ஒரு காட்சியில் மிகவும் மன வேதனையுடன் கெட்ட வார்தையில் பேசிக்கொண்டு இருப்பார். அகில் இருந்து தான் தன்னை கொள்ள வருபவர்களை வெறி கொண்ட வேங்கையாக மாறி பிரச்னையில் இருந்து தப்பிக்க திருப்பி அடிக்கிறார். லியோ கதாபாத்திரமாக வரும் விஜய் இரண்டாவது பாதியில் இருந்து தான் வருவார் என தெரிகிறது.

Thalapathy Vijay leo
Thalapathy Vijay leo [file image]

ஏனென்றால், லியோ காதாபாத்திரத்தில் வரும் விஜய் ட்ரைலரின் இரண்டு காட்சியில் மட்டும் தான் வருகிறார். மேலும், விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்காரா அல்லது படத்தில் இரண்டு விஜயா என தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் குழம்பி போய் இருக்கிறார்கள். அவர்களுடைய குழப்பத்திற்கு படம் வெளியான பிறகு தான் பதில் கிடைக்கும். ட்ரைலரை வைத்து பார்க்கையில்,  சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் இருவரும் ஒரே கேங்கில் இருப்பவர்களாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது ஏனென்றால், ட்ரைலரின் ஒரு காட்சியில் சாண்டியின் விரலை அர்ஜுன் வெட்டி எடுப்பார்.

Thalapathy Vijay
Thalapathy Vijay [file image]

அந்த காட்சியில் பாபு ஆண்டனி இருப்பார். அதைப்போலவே மற்றோரு காட்சியில் சஞ்சய் தத் வரும் காட்சியிலும் பாபு ஆண்டனி இருப்பார். எனவே, இதனை வைத்து பார்க்கையில், கண்டிப்பாக இவர்கள் இருவரும் படத்திற்கு வில்லனாக இருக்கலாம் என தெரிகிறது.   கைதி மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் LCU-வில் இணைந்தது போல லியோ திரைப்படமும் இணையும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள்.

LEOTrailerDecoding
LEOTrailerDecoding [file image]

ஆனால், டிரைலரில் வரும் ஒரு காட்சியில் கூட படம் LCU-வில் இணையும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதைப்போல தான் விக்ரம் படத்தின் ட்ரைலரில் கூட LCU-வில் இணைவதாக காட்டவில்லை கடைசியாக ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் கொடுக்கும் வகையில், லோகேஷ் கைதி டில்லையை பற்றி பேசும் காட்சிகளை வைத்திருந்தார். எனவே லியோ திரைப்படமும் அந்த LCU-வில் இணையுமா இல்லையா என்பதற்கு வரும் அக்டோபர் 19-ஆம் தேதி விடைகிடைத்துவிடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
sanjay rai kolkata
BiggBossTamilSeason8
DMK Candidate VC Chadrasekar - NTK Candidate Seethalakshmi
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai