லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “லியோ”. இந்த திரைப்படத்தில் நடிகை த்ரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், ப்ரியா ஆனந்த், கெளதம் மேனன், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தை 300 கோடி பட்ஜெட்டில் 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த திரைப்படம் வருகின்ற அக்டாபர் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் கொஞ்ச நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மிகவும் விறு விறுப்பாகவும், மும்மரமாகவும் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, அதன் ஒரு பகுதியாக தான் எல்லா ஊடகங்களுக்கும் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், வசனம் எழுதிய ரத்னகுமார் ஆகியோர் லியோ படம் குறித்து பேட்டி கொடுத்து வருகிறார்கள். அதைப்போல படத்தின் ப்ரோமோஷனுக்காக படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த அறிவிப்பை தொடர்ந்து ‘அன்பெனும்’ என தொடங்கும் அந்த பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை கேட்கும்போதே மனதை உருக்கும் வகையில் இசையும் குரலும் உள்ளதால் பலருடைய பேவரைட் பாடலாக இது மாற வாய்ப்புள்ளது. ஏற்கனவே லியோ படத்தில் இருந்து டிரைலர் மற்றும் நா ரெடி தான், படாஸ் ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து மூன்றாவது பாடலும் வெளியாகி உள்ள காரணத்தால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
மேலும், லியோ திரைப்படத்திற்கு அக்19-ம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. 19-ஆம் தேதி மட்டும் 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளும் மற்ற நாட்களில் காலை 7 மணி சிறப்பு காட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…