கார்த்திக்கு சிறுத்தை…சூர்யாவுக்கு கங்குவாவா? காலாய்க்கும் நெட்டிசன்கள்!
கங்குவா படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், சூர்யாவுக்கு பிளாப் படங்கள் கார்த்திக்கு ஹிட் படங்களா? என நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
சென்னை : சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள கங்குவா திரைப்படம் இந்த அளவுக்கு எதிர்மாறான விமர்சனங்களை பெரும் எனப் படக்குழுவே நினைத்துப் பார்த்திருக்காது. அந்த அளவுக்குப் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்துகொண்டு இருக்கிறது. திட்டமிட்டு சிலர் எதிர்மறையான விமர்சனங்களைப் பரப்பி வருகிறார்கள் மற்றபடி படம் நன்றாக இருக்கிறது என்பது தான் சூர்யா ரசிகர்களுடைய விமர்சனங்களாக இருந்து வருகிறது.
ஒரு பக்கம் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் தம்பி கார்த்திக்கு ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர்கள் அண்ணன் சூர்யாவை வைத்து இயக்கிய படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளதாகக் கலாய்த்து வருகிறார்கள். குறிப்பாக கார்த்தியை வைத்து பையா படத்தை இயக்குநர் லிங்கு சாமி இயக்கி இருந்தார்.
இந்த படம் மிகப்பெரிய ஹிட்டாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப்பெற்றிருந்தது. அதைப்போல, இயக்குநர் லிங்குசாமி சூர்யாவை வைத்து இயக்கிய அஞ்சான் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப்பெறவில்லை. அதைப்போல, இயக்குநர் செல்வராகவன் கார்த்தியை வைத்து இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு படமாக இருந்து வருகிறது.
செல்வராகவன் சூர்யாவை வைத்து இயக்கிய என்ஜிகே படம் பெரிய அளவில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப்பெறவில்லை. அதைப்போல இயக்குநர் பாண்டிராஜ் கார்த்தியை வைத்து இயக்கிய கடைக்குட்டி சிங்கம் கமர்ஷியல் ரீதியாகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதே பாண்டிராஜ் சூர்யாவை வைத்து இயக்கிய கடைக்குட்டி சிங்கம் படம் வசூல் ரீதியாகத் தோல்வியைச் சந்தித்தது.
இந்த வரிசையில் தான் தற்போது கங்குவா படம் இணைந்துள்ளதாக விமர்சித்து வருகிறார்கள். ஏனென்றால், சிறுத்தை சிவா கார்த்தியை வைத்து இயக்கிய சிறுத்தை படம் பெரிய வெற்றியை பெற்றது. ஆனால், கங்குவா படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. எனவே, அண்ணனுக்கு பிளாப் படங்கள் தம்பிக்கு மட்டும் ஹிட் படங்களா? என கலாய்த்து வருகிறார்கள்.