LEO: லியோ படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? மனம் திறந்த நடிகர் விஷால்!

vishal about leo

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது . படத்தை பார்க்க இந்திய சினிமாவை மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில் படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் தொடங்குவதற்கு முன்பே  படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் விஷால் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவியது.

பிறகு விஷால் ஒரு படத்தின் படப்பிடிப்பில் நடித்து கொண்டிருந்த நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பிற்கு லோகேஷ் சென்றதன் மூலம் விஷாலும் லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதி எனவும் தகவல்கள் பரவியது. ஆனால், சில காரணங்களால் விஷால் படத்தில்  நடிக்க மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், இதைப் பற்றி இதுவரை வாயை திறக்காமல் இருந்த விஷால் முதன் முறையாக சமீபத்திய பேட்டி ஒன்றின் மூலம் மனம் திறந்து லியோ படத்தில் நடிக்க மறுத்த காரணத்தை கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” லியோ திரைப்படத்தின்  கதையை லோகேஷ் கூறியவுடன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அந்த நேரத்தில் நான் வேறு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன்.

எனவே என்னால் லியோ படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது.  லோகேஷ் என்னிடம் கிட்டத்தட்ட ஒரு நான்கு மாதங்கள் லியோ படத்திற்காக ஒதுக்க வேண்டும் என்று கூறியிருந்தார் நான் நாலு மாதங்கள் எல்லாம் சரியாக வராது என்று அவரிடம் என்னுடைய நிலைமையை பற்றி கூறினேன் . அவர் அதனை புரிந்து கொண்டு சம்மதம் தெரிவித்தார் . இறுதியாக லோகேஷ் கனகராஜிடம் நான் சாரியும் கேட்டேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே லியோ திரைப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, மன்சூர் அலிகான், மிஷ்கின், ஜார்ஜ் மரியன், அபிராமி வெங்கடாசலம், கௌதம் வாசுதேவ் மேனன், வசந்தி, த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
Bumrah - Bhuvneshwar kumar
Vidaamuyarchi Trailer
Israel Hamas Ceasefire
SpaDex Docking - PM Modi
Train movie team wishes Vijay Sethupathi
gold price