விஸ்வாசம் வசூலை தொட முடியாமல் தவிக்கும் லியோ! தமிழகத்தில் இந்த நிலைமையா?
விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் உலகம் முழுவதும் பல கோடிகளை வசூல்செய்து சாதனை படைத்தது வந்தாலும் தமிழகத்தில் பெரிய அளவில் வசூலை குவிக்காமல் திணறி வருகிறது. தமிழ் சினிமாவில் உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் 3-வது இடத்தை பிடித்தாலும் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்களில் 5-வது இடத்திற்கு அடுத்த படியாக தான் இருக்கிறது.
தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் தமிழகத்தில் மட்டும் இதுவரை மொத்தமாக அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் திரைப்படம் 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக பொன்னியின் செல்வன் 1, விக்ரம், பாகுபலி 2, ஆகிய படங்கள் அடுத்தடுத்து இடங்களில் இருக்கிறது.
5-வது இடத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் 120 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருக்கிறது. அந்த வசூலை கூட இன்னும் தமிழகத்தில் லியோ படம் முறியடிக்கவில்லை. லியோ திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், இதுவரை தமிழகத்தில் லியோ திரைப்படம் 108 கோடி வரை வசூல் செய்துள்ளது.
படத்திற்கு கிடைத்து வந்த வரவேற்பு குறைந்த காரணத்தால் படத்தின் வசூலும் குறைந்துள்ளது. இருப்பினும் இதற்கு முன்பு தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்கள் என்ற சாதனையை படைத்துள்ள படங்கள் எல்லாம் வெளியாகி வெற்றிபெற்று விட்டது. லியோ படம் வெளியாகி 11 நாட்கள் கிட்ட தான் ஆகிறது.
எனவே, படம் வரும் நாட்களில் நல்ல வரவேற்பை பெற்று இன்னும் சில நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடினாள் விஸ்வாசம் படத்தின் தமிழக வசூலை முறியடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் சாதனையை படைத்தது போல தமிழகத்தில் லியோ படம் நல்ல வசூல் செய்து சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.