நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள காரணத்தால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
அதைப்போல வழக்கமாக விஜய் படங்கள் வெளியானால் அந்த திரைப்படங்கள் 300 கோடிகளுக்கு குறையாமல் சமீபகாலமாக வசூலை குவித்து வருகிறது. எனவே, அவரும் லோகேஷ் கனகராஜும் ஒரு திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ள காரணத்தால் கண்டிப்பாக இந்த லியோ திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில் சாதனை படைக்கும் என தெரிகிறது.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என முன்னதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. ஆனால், எந்த நேரத்தில் வெளியாகும் என தேதி குறிப்பிடப்படவில்லை. இதனை தொடர்ந்து அடுத்ததாக படத்தின் டிரைலர் மாலை 6.30 மணிக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து , அறிவிப்பின் படி அனைவரும் ஆவலுடன் டிரைலர் பார்க்க ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது லியோ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. எந்த அளவிற்கு ரசிகர்கள் டிரைலர் அருமையாக இருக்கும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தார்களோ அதே போலவே டிரைலர் இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
அந்த அளவிற்கு ட்ரைலரில் வரும் காட்சிகள் மற்றும் அனிருத்துடைய பின்னணி இசை காண்போரை மெய் சிலிர்க்க வைத்துள்ளது. ட்ரைலரை பார்த்த அனைவர்க்கும் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மேலும் படத்திற்கு இசைவெளியீட்டு விழா நடைபெறாத காரணத்தால் ட்ரைலரை பார்த்து கூட்டமாக ரசிக்கவேண்டும் என்பதற்காக பெரிய பெரிய திரையரங்குகளுக்கு வெளியே திரை வைத்து டிரைலர் காட்சி படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…