Categories: சினிமா

கேரளாவை மிரள வைத்த லியோ பாக்ஸ் ஆபிஸ்! ஜெயிலரை துரத்தும் விஜய்….

Published by
கெளதம்

ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தின் கேரளா வசூல் சாதனையை விஜய்யின் லியோ படம் பீட் செய்துள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியான “லியோ” திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் வசூல் அனைவரையும் மிரள வைத்து வருகிறது என்றே கூறலாம்.

வெளியான 9 நாட்களில் உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ,ரூ.461 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுவரை வெளியான தமிழ் படங்களில் முதல் நாளில் உலகம் முழுவதும் அதிக வசூல் செய்த படம் மற்றும் கேரளாவில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளா பாக்ஸ் ஆபிஸ் 

அதன்படி, கேரளாவில் ரூ.50 கோடி கிளப்பில் “லியோ” நுழைந்துள்ளது. ஆம், தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு இந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறதோ அதே அளவுக்கு கேரளாவிலும் நல்ல வரவேற்புடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

லியோ கேரளாவில் முதல் நாளில் 12 கோடி வசூல் செய்திருந்தது. முதல் நாளில் இருந்தே இப்படி தொடர்ச்சியாக படம் வசூலை வாரி குவித்து வருகிறது. அதன்படி, வியக்க வைக்கும் வகையில் ஒரே வாரத்தில் (7 நாட்கள்) ரூ.47.20 கோடியை கடந்துள்ளது. இந்நிலையில், இப்பொது 9 நாட்கள் கடந்த நிலையில், ரூ.50 கோடியை தாண்டியுள்ளதாக கேரளா பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

ரிலீசுக்கு முன்பே முரட்டு வியாபாரம்! ‘லியோ’ படத்தை மிஞ்சிய ‘தளபதி 68’?

ஜெய்லரை முந்திய லியோ

இந்நிலையில், கேரளாவில் லியோ திரைப்படம் 9 நாட்களில் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளது, ஆனால் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் அதே நாட்களில் வெறும் ரூ.40 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஜெயிலர் வெளியாகி ஒரு வாரத்தில் உலக முழுவதும் (7 நாட்கள்) ரூ.375 கோடி வசூல் செய்திருந்தது. ஆனால், விஜய்யின் லியோ திரைப்படம் ஒரு வாரத்தில் ரூ.461 கோடி வசூல் செய்து அந்த சாதனையை முறியடித்துள்ளது.

இப்படி, எல்லாவற்றிலும் ஜெயிலர் சாதனையயை லியோ முறியடித்த நிலையில், ஜெயிலரின் மொத்த வசூலை லியோ பீட் செய்யுமா என்று பயங்கர எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏன்னென்றால், ஜெயிலர் மொத்தம் 650 கோடி ரூபாய் வசூலித்திருந்ததாக சொல்லப்படுகிறது.

அஜித் படத்தில் நான் நடிச்சா எப்புடி இருக்கும் என கேட்ட ரஜினிகாந்த்! ரகசியத்தை உளறிக்கொட்டிய பிரபல இயக்குனர்!

லியோ

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படத்தில் த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மன்சூர் அலிகான், கெளதம் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

Published by
கெளதம்

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

5 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

7 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

8 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

9 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

10 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

10 hours ago