லியோ சிறப்பு காட்சி! விதிமீறல் நடைபெறாமல் இருப்பதைக் கண்காணிக்கச் சிறப்புக் குழு அமைக்க உத்தரவு!

leo vijay theatre

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி இருந்தது. அதன்படி, லியோ திரைப்படத்திற்கு அக்19-ம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை  சிறப்பு காட்சிகள் உண்டு எனவும், 19-ஆம் தேதி மட்டும் 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளும் மற்ற நாட்களில் காலை 7 மணி சிறப்பு காட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், லியோ திரைப்படத்திற்கான முதல் காட்சியை காலை 9 மணிக்கு தொடங்கவேண்டும் என இன்று புதிய அறிவிப்பை தமிழக அரசு வெளியீட்டு இருந்தது. எனவே,  காலை 9 மணிக்கு தான் சிறப்பு காட்சி தொடங்க வேண்டும் என்றும், நள்ளிரவு 1:30க்குள் அனைத்து காட்சிகளும் முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, லியோ படத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புக் காட்சி திரையிடுவதில் விதிமீறல் நடைபெறாமல் இருப்பதைக் கண்காணிக்கச் சிறப்புக் குழு அமைக்க அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயப்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராக்கி பாயை அலற விடப்போகும் லியோ தாஸ்! கேரளாவில் முரட்டு சம்பவம் லோடிங்!

மேலும், லியோ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார். படம் வெளியாக இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில், படத்தின் டிக்கெட் புக்கிங் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்