‘லியோ’ படத்தால் லாபமில்லை – திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர்!

vijay leo

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டவுள்ளதாகவும். அதில், லியோ படத்தின் பங்குத்தொகை பங்கீடு விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக, முதல் வாரத்தில் 70% பங்குத்தொகை தான் தயாரிப்பாளர்களுக்கும் 30% லாபம் திரையரங்குகளுக்கு வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால், லியோ திரைப்படத்துக்கு வெறும் 20 சதவீதம் மட்டுமே திரையரங்குகளுக்கு வழங்கப்பட்டு, மீதமுள்ள 80 சதவீதத்தை தயாரிப்பாளர் பெற்று கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், 70% பங்குத்தொகை வழங்குவதால் வருவாய் இழப்புடன் நஷ்டம் ஏற்படுவதாகவும், இனி 60%க்கு மேல் பங்குத்தொகை வழங்க போவதில்லை என திரையரங்க உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, ஒரு படமானது திரையங்குகளில் வெளியாகி OTT-ல் 8 வாரத்தில் வெளியிட்டால் 60% பங்குத்தொகை கொடுக்க முன் வரும் நிபந்தனைகளோடு,  4 வாரத்தில் OTT-ல் வெளியிடும் படங்களுக்கு 50% மட்டுமே தருவோம் என முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, தயாரிப்பாளர்கள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு சென்னை வந்த திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், திருப்பூர் சுப்பிரமணியத்துடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அப்போது, திரையரங்க உரிமையாளர்களுக்கு ‘லியோ’ திரைப்படம் பெரிய லாபத்தை கொடுக்கவில்லை. லியோ தயாரிப்பாளர்கள் இதுவரை தமிழகத்தில் இல்லாத அளவு லாபத்தை வாங்கியுள்ளனர். இதனால், பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்கள் இப்படத்தை விருப்பப்பட்டு போடவில்லை என திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

லியோ திரைப்படம் ஒரு வார விடுமுறையில் சிறப்பாக ஓடியது, வசூலையும் குவித்தது. இதனையடுத்து நெகடிவ் விமர்சனங்கள் எழுந்ததால், இப்பொது படம் பார்க்க ஆர்வம் காட்டததால் டிக்கெட் புக்கிங் படு மோசமாக சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், திரையரங்குகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

லியோ ஒரு வார வசூல்

லியோ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், வெளியான ஒரு வாரத்தில் படம் உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் சினிமா வாழ்க்கையில் 500 கோடி வசூல் கொடுத்த திரைப்படம் மற்றும் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது.

லியோ கொண்டாட்டத்தில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய இயக்குனர் லோகேஷூக்கு காயம்!

லியோ

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தில் த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மன்சூர் அலிகான், கெளதம் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்