leo vijay theatre [File Image]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை காண ரசிகர்கள் பெரும் ஆவலில் உள்ளனர். லியோ திரைப்படம் வெளியானதை ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், நடிகர் விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் கேரளாவில் அதிகாலை 4 மணிக்கு வெளியானது. தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதிகளில் உள்ள ஒரு சில திரையரங்குகளில் லியோ திரைப்படம் தமிழில் வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் லியோ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு அடுத்த படியாக 7 மணி காட்சிகளுக்கும் அனுமதி கேட்டு படக்குழு முயற்சி செய்த நிலையில், அதுவும் தோல்வியானது 7 மணி காட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள், LEO படத்தை ரசிகர்கள் அதிக விலை கொடுத்து பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்க்க வேண்டாம் என்றும், நமது தினசரி வேலைகளுக்கு நடுவே, பொழுதுபோக்கிற்காக பார்க்கும் படத்திற்கு அவ்வளவு செலவு, முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் பொறுமையாக காத்திருந்து அடுத்தடுத்த காட்சிகளில் முயற்சி செய்து படம் பார்க்கலாம் என்றும் அறிவுரை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…