லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருந்த இந்த ‘லியோ’ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று முன்தினம் (கடந்த 19-ஆம் தேதி) வெளியானது. இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் ரூ.210 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
லியோ திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழில் மட்டுமில்லாமல் படத்திற்கு எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் காரணமாக வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.
ஆம்… முதல் நாளில் மட்டும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 148 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. தற்பொழுது, இந்த திரைப்படம் தமிழ்நாட்டை போலவே மற்ற மாநிலங்களிலும் கொண்டாடி வருகிறார்கள் போல் தெரிகிறது.
தற்போது, தெலுங்கு சினிமாவில் எவ்வளவு வசூலித்திருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.16 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், தற்பொழுது 2 நாட்களில் ரூ.24 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தின் வெளியீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
தலைப்பு சர்ச்சை
முன்னதாக, தெலுங்கில் ‘LEO’ டைட்டில் பயன்பாடு குறித்து தொடரப்பட்ட வழக்கில், (20ம் தேதி) இன்று வரை வெளியிட இடைக்கால தடை விதித்து ஹைதராபாத் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், லியோ தயாரிப்பு நிறுவனம், வழக்கு தொடர்ந்த ‘D Studio’ என்ற நிறுவனத்திடம் நடத்திய பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்த நிலையில், லியோ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பில் 19ம் தேதி வெளியாகி கொண்டாடப்பட்டு வருகிறது.
கேரளா பாக்ஸ் ஆபிஸ்
அதன்படி, கேரளாவில் முதல் நாளில் ரூ.12 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. மேலும், இரண்டாம் நாளான நேற்று ரூ.6.85 கோடி வசூலித்து மொத்தமாக ரூ.18.85 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ.20 கோடி வசூல் செய்து புதிய சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…