ஒரே வாரத்தில் ஜெயிலர் வசூலை ஓடவிட்ட லியோ திரைப்படம்!
ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லியோ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்தது வருகிறது. இப்பொது ஜெயிலர் வசூலை முந்தியுள்ளது.
விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் உலக பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த லியோ திரைப்படம் 7 நாட்களில் ரூ.461 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
அக்டோபர் 19ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இரண்டாவது வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தலைவர் 171 படத்தை நீ தான் பண்ணனும்! ரஜினிக்காக ஒளிப்பதிவாளரிடம் கெஞ்சிய விஜய்!
லியோ பாக்ஸ் ஆபிஸ்
இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.148.5 கோடிகளை வசூலித்தது. மேலும், கேரளாவில் ரூ.40 கோடிகளை கடந்தது. அது மட்டும் இல்லாமல், வெளிநாடு பாக்ஸ் ஆபிஸிலும் இப்படம் பெரும் சாதனை படைத்தது. அதன்படி, UK பாக்ஸ் ஆபிஸில் ரூ. 12 கோடி (£1.4 மில்லியன்) வசூலித்து அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படமாக மாறியுள்ளது.
நடிகர் அஜித்தா இது? ஆளே மாறி போயிட்டாரே..வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!
மேலும், அமெரிக்காவில் ரூ.41.5 கோடியை ($5 மில்லியன்) எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி, எல்லா இடங்களிலும் வசூலை குவித்து உலக முழுவதும் இந்த திரைப்படம் 7 நாட்களில் ரூ.461 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஜெயிலரை ஓரங்கட்டிய லியோ
இந்த நிலையில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 9ம் தேதி அன்று வெளியானது. ஜெயிலர் வெளியாகி ஒரு வாரத்தில் (7 நாட்கள்) ரூ.375 கோடி வசூல் செய்திருந்தது. ஆனால், விஜய்யின் லியோ திரைப்படம் ஒரு வாரத்தில் ரூ.461 கோடி வசூல் செய்து அந்த சாதனையை முறியடித்துள்ளது. இது போல், பல சாதனைகளை லியோ திரைப்படம் முறியடித்து வருவது குறிப்பிடத்தக்கது.