LeoIndustryHit [File Image]
லியோ திரைப்படம் வெளியான 12 நாட்களில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்றதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் அறிவித்துள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கெளதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “லியோ”. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
விமர்சனங்கள் படத்திற்கு கலவையாக வந்தாலும் கூட படத்தின் வசூல் பல சாதனைகளை படைத்தது வருகிறது. குறிப்பாக தமிழ் சினிமாவில் முதல் நாளில் உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும், கேரளாவில் அதிகம் வசூல் செய்த சாதனை என்றும் பல சாதனைகளை படைத்தது. இன்னும் சாதனைகளை புடைத்துக்கொண்டு இரண்டாவது வாரமாக வசூலை குவித்து வருகிறது.
இந்த நிலையில், லியோ திரைப்படம் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், படம் எத்தனை கோடி இதுவரை வசூல் செய்துள்ளது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, லியோ படம் வெளியான 12 நாட்களில் உலகம் முழுவதும் 540 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லியோ திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் படத்தின் வெற்றிவிழாவை படக்குழு கொண்டாட திட்டமிட்டு உள்ளது. அதற்கான அரங்கம் அமைக்கும் பணிகளும் மும்மரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது முடிவடைந்து தயாராக இருக்கிறது. பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்துகொண்டு உறையாற்ற இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…