தமிழ் சினிமாவில் இப்போது லியோ திரைப்படம் lcu-வில் வருகிறதா அல்லது படம் தனியாக நடக்கும் ஒரு கேங்ஸ்டார் படமா என்ற கேள்வியும் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு தான் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, விக்ரம் ஆகிய இரண்டு படங்களும் LCU-வில் தான் வருகிறது. எனவே, இனிமேல் அவர் இயக்கும் படங்கள் கண்டிப்பாக இந்த LCU-வில் தான் வரும் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
ஆனால், லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்துள்ள காரணத்தால் அவருக்கு இருக்கும் மார்கெட்டிற்கு அவர் எப்படி இப்படி ஒரு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பார் என்ற கேள்வியும் கோலிவுட் வட்டாரத்தில் கிளம்பியுள்ளது. லியோ படத்தின் ட்ரைலர் வெளியாகும் போது கூட அதில் இந்த படம் LCU-வில் வரும் என்பதற்கான ஒரு குறியீடு கூட இல்லை.
எனவே, இந்த லியோ படம் LCU-வில் தான் வருகிறதா என்பதற்காகவே படத்தை பார்க்க பலரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இவை அனைத்திற்கும் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி விடைகிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ரோலக்ஸ் கேங்கில் ஒருவராக விக்ரம் படத்தில் நடித்திருந்த விஷ்வா லியோ திரைப்படம் கண்டிப்பாக LCU தான் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில் ” விக்ரம் படத்தில் நான் நடித்திருந்த காரணத்தால் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் விஜய் சாரை வைத்து படம் இயக்குகிறார் என்று தெரிந்தவுடன் விஜய் சாரை பார்க்க நாங்கள் வரலாமா என்று கேட்டேன். அதற்கு இல்ல இல்ல தயவுசெஞ்சி வரதீங்க என்று கூறினார்கள். அதற்கு காரணம் லியோ படம் LCU-க்குள் வருவது தான். நான் ஒரு வேலை அங்கு சென்றால் அதற்கான புகைப்படங்கள் லீக் ஆகிவிடும்.
அப்படி லீக்கானல் அனைத்தும் வெளியே தெரிந்துவிடும். எனவே, இதன் காரணமாக விக்ரம் படத்தில் நடித்த யாருமே இந்த படத்திற்கு கொண்டு வரவில்லை” எனவும் விஷ்வா தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜும் பல பேட்டிகள் கொடுத்து வருகிறார். ஆனால், இதுவரை லியோ LCU தான் என்று கூறவே இல்லை ஆனால் அந்த ரகசியத்தை விஷ்வா உடைத்துள்ள காரணத்தால் லோகேஷ் சற்று அப்செட்டில் இருக்கிறாம்.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் விக்ரம் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசனை சந்தித்து இந்த இரண்டு படங்களில் உள்ள ஒரு சில காட்சிகளை லியோ படத்தில் வைக்க (என்ஓசி) சான்றிதழை பெற்றதாகவும் தகவல்கள் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…
சென்னை: தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
சென்னை: குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை…
நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் மற்றும் எத்தனை விளக்கு ஏற்றலாம் என்பதை காணலாம். சென்னை :நாம் இறைவனை வழிபடும்…
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…