vijay leo [File Image]
முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால் அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் கூட வெளியே வராமல் படத்தோடு தான் போட்டுக்காட்டப்படும். ஆனால், இப்போது இருக்கும் காலத்தில் ஒரு பெரிய நடிகரின் படம் வெளியாகிறது என்றால் அந்த படத்தில் இடம்பெற்ற சில முக்கியமான காட்சிகளை ட்ரைலராக எடிட் செய்து படம் வெளியாவதற்கு முன்பு திரையரங்குகளில் ரசிகர்களுக்காக ஒளிபரப்பு செய்கிறார்கள்.
அன்று ஒரு நாள் மட்டும் படத்தின் ட்ரைலர்களை ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம் என்பதால் ரசிகர்கள் கூட்டமும் திரையரங்குகளில் கூடி விடுகிறது. அப்படி தான் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் கூட்டமும் சூழந்தனர்.
வெளியான ‘லியோ’ டிரைலர் …தியேட்டரை நொறுக்கிய ரசிகர்கள்..!
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சென்னையில் அமைந்துள்ள ரோஹிணி திரையரங்கில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது என்றே கூறலாம். ஆனால், ட்ரைலரை பார்க்க வந்த விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் இருந்த இருக்கைகளை சேதப்படுத்தினார்கள் என்றே சொல்லாம். இந்த சம்பவம் பெரும் கண்டனத்தை எழுப்பிய நிலையில், உடனடியாக திரையரங்கு உரிமையாளரை விஜய் நேரில் அழைத்தும் பேசினார்.
இந்த நிலையில், திரையரங்குகளில் இனி திரைப்பட ட்ரெய்லர்களை வெளியிடுவது இல்லை என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளனர். ஒரு சில திரையரங்குகளில் ட்ரெய்லர்கள் ரிலீஸ் செய்வதன் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதோடு, திரையரங்கிலும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இனி திரையரங்குகளில் ட்ரெய்லர்கள் வெளியிடுவது இல்லை என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
LeoFDFS: லியோ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
லியோ படத்தின் டிரைலர் வெளியாகும் போது ரசிகர்கள் இருக்கைகளை சேதப்படுத்தியதன் எதிரொலி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்க முடியாது. காலை 9 மணி காட்சிக்கு பதில் 7 மணி காட்சிக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…