லியோ சம்பவம் எதிரொலி: “திரையரங்குகளில் இனி நோ ட்ரெய்லர்” -திரையரங்கு உரிமையாளர் சங்கம் !

vijay leo

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால் அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் கூட வெளியே வராமல் படத்தோடு தான் போட்டுக்காட்டப்படும். ஆனால், இப்போது இருக்கும் காலத்தில் ஒரு பெரிய நடிகரின் படம் வெளியாகிறது என்றால் அந்த படத்தில் இடம்பெற்ற சில முக்கியமான காட்சிகளை ட்ரைலராக எடிட் செய்து படம் வெளியாவதற்கு முன்பு திரையரங்குகளில் ரசிகர்களுக்காக ஒளிபரப்பு செய்கிறார்கள்.

அன்று ஒரு நாள் மட்டும் படத்தின் ட்ரைலர்களை ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம் என்பதால் ரசிகர்கள் கூட்டமும் திரையரங்குகளில் கூடி விடுகிறது. அப்படி தான் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் கூட்டமும் சூழந்தனர்.

வெளியான ‘லியோ’ டிரைலர் …தியேட்டரை நொறுக்கிய ரசிகர்கள்..!

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சென்னையில் அமைந்துள்ள ரோஹிணி திரையரங்கில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது என்றே கூறலாம். ஆனால், ட்ரைலரை பார்க்க வந்த விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் இருந்த இருக்கைகளை சேதப்படுத்தினார்கள் என்றே சொல்லாம். இந்த சம்பவம் பெரும் கண்டனத்தை எழுப்பிய நிலையில், உடனடியாக திரையரங்கு உரிமையாளரை விஜய் நேரில் அழைத்தும் பேசினார்.

புதிய திரைப்படங்கள் கொண்டாட்டத்தின் போது வன்முறை! உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு கொடுத்த சமூக ஆர்வலர்!

இந்த நிலையில், திரையரங்குகளில் இனி திரைப்பட ட்ரெய்லர்களை வெளியிடுவது இல்லை என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளனர். ஒரு சில திரையரங்குகளில் ட்ரெய்லர்கள் ரிலீஸ் செய்வதன் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதோடு, திரையரங்கிலும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இனி திரையரங்குகளில் ட்ரெய்லர்கள் வெளியிடுவது இல்லை என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்  தெரிவித்துள்ளார்.

LeoFDFS: லியோ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

லியோ படத்தின் டிரைலர் வெளியாகும் போது ரசிகர்கள் இருக்கைகளை சேதப்படுத்தியதன் எதிரொலி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  மேலும், லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்க முடியாது. காலை 9 மணி காட்சிக்கு பதில் 7 மணி காட்சிக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்