Leo Hindi Poster: இது தான் தரம்!! அனைத்து போஸ்டர்களையும் ஓரங்கட்டிய லியோவின் ஹிந்தி போஸ்டர்!

leoHindiPoster

லியோ படத்தின் ஹிந்தி போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது. போஸ்டரில் விஜய் சஞ்சய் தத் கழுத்தை நெறிக்கும் படி, காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படத்தை பார்க்க இந்திய சினிமாவை மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில், படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக தொடங்கியுள்ளது. அதன்படி, படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், லியோ படத்தின் அப்டேட் எப்போது தான் வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு, நேற்று முன் தினம் முதல் அந்தந்த திரையுலகின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.

இதுவரை தெலுங்கு மற்றும் கன்னட, தமிழ் சினிமா போஸ்டர்கள் வெளியான நிலையில், தற்பொழுது, அலறவிடும் ஹிந்தி போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் “KEEP CALM AND FACE THE DEVIL” என்று வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் முன்னதாக, வெளியான அனைத்து போஸ்டர்களையும் காட்டிலும் தனிரகமாக அமைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்