லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரி, தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளரிடம் படத்தயாரிப்பாளர் தரப்பு மனு அளித்துள்ளனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை மறு நாள் வெளியாகவுள் நிலையில், லியோ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அக்டோபர் 19-ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கு காட்சிகளை தொடங்க அனுமதி அளிப்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்கட்டும். இது தொடர்பாக, படத்தின் தயாரிப்பு நிறுவனம் அரசிடம் மனு அளிக்கலாம். அந்த மனுவை நாளை மதியத்துக்குள் அரசு பதில் தெரிவிக்க வேண்டும் என தெரிவிப்பட்டிருந்தது.
இந்நிலையில், லியோ படத்திற்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கக் கோரி தமிழக அரசிடம் மனு அளிப்பதற்காக, லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவன தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் படக்குழு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளர் அமுதாவுடன் சந்தித்து பேசினார்கள்.
லியோ சம்பவம் எதிரொலி: “திரையரங்குகளில் இனி நோ ட்ரெய்லர்” -திரையரங்கு உரிமையாளர் சங்கம்!
இந்த சந்திப்பிக்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய லியோ தயாரிப்பு நிறுவன வழக்கறிஞர்கள், லியோ திரைப்படத்திற்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி கோரி தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளரிடம் மனு அளித்துள்ளோம் இன்று மாலைக்குள் முடிவை தெரிவிப்பதாக கூறினார்கள். எனவே, 7 மணி காட்சிக்கு அனுமதி தரப்படும் என்று உறுதியாக நம்பிக்கை உள்ளது என்று தயாரிப்பு நிறுவன தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
திரைத்துறையில் அரசியல் தலையீடு இல்லை
சினிமா விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டதில்லை என அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், லியோ திரைப்படத்திற்கு 5 சிறப்பு காட்சிகள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரை உலகம் எங்களுடை நட்பு உலகம், திமுக அரசு திரைத்துறையை முடக்கவில்லை, அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துகிறோம். மேலும் அவர் பேசுகையில், லியோ திரைப்பட விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார்.
அனுமதியின்றி லியோ பட பேனர் வைக்கக்கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!
லியோ
விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார். படம் வெளியாக இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில், ப்ரோமஷன் பணிகள் ஒரு பக்கம் நடக்க, மறுபக்கம் படத்தின் டிக்கெட் புக்கிங் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…