விஜய் நடிப்பில் ‘லியோ’ திரைப்படம் வெளியான 2 நாளில் கேரளா மற்றும் கர்நாடகாவில் மட்டும் ரூ.20 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருந்த இந்த ‘லியோ’ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று முன்தினம் (கடந்த 19-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. 7 ஸ்க்ரீன் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.
லியோ திரைப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்தது வருகிறது. லியோ படம் வெளியான இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இரண்டு நாளில் உலகம் முழுவதும் ரூ.210 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், நேற்றைய தினம், இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்திருந்தது என தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக வரும் நாட்கள் விடுமுறை என்பதால, வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார் எல்லாம் வேண்டாம் பா..அது மட்டும் போதும்! நெகிழ வைத்த விஜய்!
தமிழில் எந்த அளவுக்கு வரவேற்பு பெற்றுள்ளதோ அதெ அளவில், கேரளா மற்றும் கர்நாடகாவில் வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வகையில், தமிழ் திரைப்படங்களில் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும், கேரளாவில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்கிற சாதனையும் லியோ படம் படைத்துள்ளது.
#LeoIndustryHit : பாக்ஸ் ஆபிஸில் தெறிக்கவிடும் ‘லியோ’! 2 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?
கேரளா – கர்நாடகா பாக்ஸ் ஆபிஸ்
அதன்படி, கேரளாவில் முதல் நாளில் ரூ.12 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. மேலும், இரண்டாம் நாளான நேற்று ரூ.6.85 கோடி வசூலித்து மொத்தமாக ரூ.18.85 கோடி வசூல் செய்துள்ளது. இதனையடுத்து, கர்நாடகாவில் பார்க்கையில் முதல் நாளில் ரூ.13.65 கோடியும் இரண்டாம் நாளில் ரூ.2.9 கோடி என மொத்தம் ரூ.16.55 கோடி வசூலித்துள்ளது. இன்றைய பாக்ஸ் ஆபிஸை கணக்கிட்டால் இரு மாநிலங்களிலும் ரூ.20 கோடி வசூல் செய்து புதிய சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…