வருகிறது ‘லியோ 2’ ! ஹெலிகாப்டரில் வந்து அப்டேட் கொடுக்க காத்திருக்கும் லோகேஷ் கனகராஜ்!

lokesh kanagaraj leo 2

லியோ 2 படத்திற்கான அப்டேட் வரும் என படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளர். 

லியோ

நடிகர் விஜய் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் கடந்த அக்.19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான லியோ படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி இருந்த இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.

லியோ 2

லியோ திரைப்படம் லோகேஷ் கனகராஜின் LCI-வின் கீழ் வருவதன் காரணமாக படத்திற்கான இரண்டாவது பாகம் உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளது. படம் முடியும் பொழுதும் நடிகர் விஜய் கமல்ஹாசனுடன் போனில் பேசும் காட்சி இடம்பெற்றிருக்கும். எனவே, அதனை வைத்து பார்த்தால் கண்டிப்பாக படத்திற்கான இரண்டாவது பாகம் உருவாக வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அப்டேட் கொடுத்த லோகேஷ்

நேற்று லியோ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட லோகேஷ் லியோ 2 குறித்து பேசியுள்ளார். விழாவில் அவரிடம் லியோ 2 வருமா என்ற கேள்வி எழுந்த நிலையில், அதற்கு பதில் அளித்த லோகேஷ் ” தயாரிப்பாளர் லலித் எனக்கு பரிசாக ஹெலிகாப்டர் கொடுப்பதாக சொன்னார் அதற்கான பெயின்டிங் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்த பிறகு அந்த ஹெலிகாப்டரில் வந்து லியோ 2 அப்டேட் தருகிறேன்” என்று கூறிஉள்ளார்.

லோகேஷ் என்னோட கட்சியில் சேர்ந்தால் இந்த பதவி தான் கொடுப்பேன்! நடிகர் விஜய் கலகல பேச்சு!

லியோ வசூல்

லியோ படம் வெளியான 12 நாட்களில் உலகம் முழுவதும் 560 கோடி வசூல் செய்திருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படம் வெளியான 14 நாட்களில் உலகம் முழுவதும் எவ்வளவு கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, படம் வெளியான 14 நாட்களில் உலகம் முழுவதும் 588 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்