விஜய் இருந்தால் ‘லியோ-2’ பண்ணலாம்! LCU-க்கு அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!
விஜய் இருந்திருந்தால் லியோ-2 அல்லது விக்ரம்-2 தான LCU-வின் கடைசி படமாக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக, LCU-தொடர்பாக இவர் அடுத்து இயக்கவிருக்கும் படம் ‘கைதி-2’ தான் எனச் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் கூறியிருந்தார்.
மேற்கொண்டு, ரோலெக்ஸ், விக்ரம்-2 என அடுத்தடுத்த LCU திரைப்படங்கள் வரிசையிலிருந்து வருகிறது. இருப்பினும், LCU-வில் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு படம் என்றால் அது லியோ-2 தான். லியோ படத்திற்குக் கிடைத்த வரவேற்பு, லியோ-2 திரைப்படத்திற்கும் இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை.
ஆனால், அந்த திரைப்படம் உருவாவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு தான். விஜய் சினிமாவை விட்டு விலகி தற்போது அரசியலில் ஈடுபட்டு வருவதாலும் தான் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்ததால் லியோ-2 திரைப்படம் உருவாகாது என்பது அனைவர்க்கும் தெரிந்தது.
இந்த சூழ்நிலையில் லோகேஷ் கனகராஜ் ஒரு தனியார் யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் விஜய் குறித்தும் லியோ-2 குறித்தும் ஸ்வாரஸ்யமான தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் பேசிய போது, “விஜய் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்த போது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகுமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.
ஆனால், அவர் ஒரு வேலை சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக நான் அவருடன் இணைந்து லியோ-2 இயக்கியிருப்பேன். ஒரு வேளை ‘லியோ-2’ அல்லது ‘விக்ரம்-2’ தான் LCU-வின் கடைசி திரைப்படமாக இருந்திருக்கும்”, என லோகேஷ் கனகராஜ் பேசி இருந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025
பாகிஸ்தானை விட நாங்க தான் கெத்து! முன்னாள் இந்திய வீரர் ஓபன் ஸ்பீச்!
February 22, 2025