லீனாவின் பக்கம் நின்றால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்…! இயக்குனர் சுசி கணேசன் என் தந்தைக்கு மிரட்டல் …!சித்தார்த் பரபரப்பு தகவல்

Default Image

இயக்குனர் சுசி கணேசன் தொடர்பாக நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பு தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் #MeToo மூவ்மென்ட் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது. அரசியல், சினிமா, ஊடகம் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் கவிஞர் வைரமுத்து, நடன இயக்குநர் கல்யாண், இயக்குநர் சுசி கணேசன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
Image result for susi ganeshan leena
சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார் கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை.

ஆனால் இவரது குற்றச்சாட்டு தொடர்பாக இயக்குநர் சுசி கணேசன் விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில், லீனா மணிமேகலை விளம்பரத்திற்காக என் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறுகிறார்.லீனா மணிமேகலை கூறிய புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் சொல்வதெல்லாம் இட்டுக்கட்டிய பொய் என்று இயக்குநர் சுசி கணேசன் தெரிவித்தார்.
Image result for susi ganeshan leena

இந்நிலையில் கவிஞர் லீனா மணிமேலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இயக்குநர் சுசி கணேசன் புகார் அளித்துள்ளார்.கவிஞர் லீனா மணிமேலை மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி இயக்குநர் சுசி கணேசன் கோரிக்கை விடுத்தார்.
 
Image result for siddharth
இந்நிலையில் இயக்குனர் சுசி கணேசன் தொடர்பாக நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பு தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். அவர் பதிவில் ,நான் லீனாவின் பக்கம் நின்றால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என இயக்குனர் சுசி கணேசன் என் வயது முதிர்ந்த தந்தையை தொலைபேசியில் மிரட்டியுள்ளார்.எனவே நான் இப்போது அனைவருக்கும் அழுத்தமாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நான் லீனா மணிமேகலைக்கு துணை நிற்கிறேன்.தைரியமுடன் போராடுங்கள் சகோதரி ” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/Actor_Siddharth/status/1052471439188611073

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TODAY
Dhanush - Nayanthara
ToxicTheMovie
edappadi palanisamy MK STALIN
kalaignar Magalir Urimai Thogai
rn ravi velmurugan mla
vishal health issue