பழம்பெரும் பாலிவுட் நடிகர் ஜூனியர் மெஹ்மூத் காலமானார்.!

புற்றுநோயுடன் போராடி வந்த பழம்பெரும் இந்தி நடிகர் ஜூனியர் மெஹமூத் (67) சிகிச்சை பலனின்றி இன்று (08.12.203) காலமானார். தற்போது, அவரது மறைவிற்கு நட்சத்திரங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜூனியர் மெஹமூத்தின் இறுதிச் சடங்கு இன்று மும்பையில் உள்ள சாண்டாகுரூஸ் கப்ரஸ்தானில் நடைபெறுகிறது.
மறைந்த நடிகர் ஜூனியர் மெஹ்மூத் அவரது மனைவி லதா மற்றும் அவரது இரண்டு மகன்களுடன் மும்பையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், மூத்த நடிகரின் மறைந்த செய்தியை அவரது குடும்பத்தினர் உருதி செய்துள்ளார்கள். இது தொடர்பாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஜூனியர் மெஹ்மூத் அதிகாலை 2:15 மணியளவில் அவரது இல்லத்தில் காலமானதாக தெரிவித்தனர்.
ஜூனியர் மெஹ்மூத்தின் மகன் ஹுஸ்னைன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், 18 நாட்களுக்கு முன்பு நான்காம் நிலை புற்றுநோய் இருந்தபோதுதான் அவருக்கு வயிற்றுப் புற்றுநோய் இருப்பது தெரியவந்ததாகவும், அவர் டாடா மெமோரியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
கையில் துப்பாக்கி உடன் ராக்கி பாய்! யாஷ் 19 படத்தின் தலைப்பு அறிவிப்பு!
ஜூனியர் மெஹ்மூத்
மொஹபத் ஜிந்தகி ஹை (1966) திரைப்படத்தின் மூலம் ஜூனியர் மெஹ்மூத் திரைப்படத் துறையில் குழந்தை நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு, கட்டி படாங், மேரா நாம் ஜோக்கர், பரவரிஷ், தோ ஆவூர் தோ பாஞ்ச் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்பு தவிர்த்து அவர் பல மராத்தி திரைப்படங்களின் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருந்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025