நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் லாரா(16) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12 வகுப்பு படித்து வரும் லாரா கடந்த சில நாட்களாகவே மன சோர்வாக இருந்ததாகவும், செப்டம்பர் 19 அதிகாலை 3 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விஜய் ஆண்டனியின் மகள் இறப்பு பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ள நிலையில், அவருடைய மகளுக்கு இரங்கலை தெரிவித்துவிட்டு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஆறுதல்களை தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையில், விஜய் ஆண்டனி தற்கொலை குறித்து முன்னதாக பேசி அட்வைஸ் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
அதில் விஜய் ஆண்டனி பேசியதாவது ” சிலர் பண பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஒரு சிலர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எனக்கு தெரிந்து பள்ளிக்கூடத்தில் தான் நிறைய தற்கொலைகள் நடக்கிறது. படிப்புனால் வரும் மன அழுத்தத்தால் இது நடக்கிறது.
நம்மளும் பள்ளி கூடத்தில் இருந்து வந்தவுடன் குழந்தைகளை டியூசன் போய் என்று சொல்கிறோம். பள்ளி கூடத்தில் ஏற்கனவே அவர்கள் படித்துவிட்டு தான் வருகிறார்கள். எனவே நாம் எப்போதும் படி படி என இயந்திரமாக மாற்ற முயற்சி செய்கிறோம். இப்படி செய்வதால் அவர்களை நாம் சிந்திக்க நேரம் இல்லாமல் செய்துவிடுகிறோம். ஆனால், இப்படி நடக்க கூடாது சுற்றி உள்ளவர்கள் இதற்கு காரணமாக இருக்கிறார்கள்.
முக்கியமாக இப்படி தற்கொலை நடக்க பெற்றோர்கள் தான் காரணமாக இருக்கிறார்கள். பசங்களை ஃப்ரீயா இருக்க விடுங்க” என விஜய் ஆண்டனி தற்கொலை பற்றி அட்வைஸ் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இப்படி பட்ட நல்ல மனிதருக்கு இப்படி சோகமான நிலைமை வந்துவிட்டதே என சோகத்துடன் கூறி வருகிறார்கள்.
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…