எதிரியையும் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்! தளபதி விஜயின் அட்வைஸ்!
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து சாதனை படைத்துள்ள நிலையில், தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சாய் ராம் கல்லூரியில், மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், பல சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய் அவர்கள் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், ஒருமுறை எம்.ஜி.ஆரிடம் அவரது அமைச்சர், கருணாநிதி குறித்து தவறாக பேசியுள்ளார்.
இதனையடுத்து, உடனடியாக எம்,ஜி.ஆர் அந்த அமைச்சரை காரை விட்டு வெளியேற்றியுள்ளார். இதை கூறிவிட்டு எதிரியாக இருந்தாலும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.