நடிகர் சாந்தனு விஜயின் தீவிர ரசிகர் என்பது பலருக்கு தெரிந்த விஷயம் தான். கடந்த ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தில் கூட சாந்தனு முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சாந்தனு ஆரம்ப காலத்தில் இருந்தே ஹீரோவாக நடித்து வருகிறார். ஆனால் அவருக்கு சொல்லிக்கொள்ளும் படி எந்த படமும் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.
இதனால் என்னவோ, சமீப காலமாக சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார். இந்த நிலையில், சாந்தனு விஜய் தனக்கு கூறிய அட்வைஸ் பற்றி பேசியுள்ளார்.
இதையும் படியுங்களேன்- ஏதோ செய்கிறாய்…எங்களை ஏதோ செய்கிறாய்…அக்மார்க் கவர்ச்சியில் பிரியா ஆனந்த்.!
அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சினம் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது அதில் நடிகர் சாந்தனு கலந்து கொண்டு பேசியது” எனக்கு தனிப்பட்ட முறையில் அருண் விஜய்யை மிகவும் பிடிக்கும். அவரின் சினிமா வாழ்க்கையை என்னோடு பல இடங்களில் பொருத்திப் பார்க்க முடியும். பலரும் அவரை சொல்லியே என்னை ஊக்கப்படுத்தினர்.
விஜய் அண்ணா என்னிடம் ஒரு முறை “அருண் விஜய்யை பாரு ரொம்ப கஷ்டத்த தாண்டி இன்னைக்கு அவருக்கான இடத்திற்கு வந்துட்டாருல்ல, உனக்கும் அதுபோல நல்லது நடக்கும்” என அருண் விஜய்யை மையமாக சொல்லி விஜய் தனக்கு அட்வைஸ் செய்ததாக சாந்தனு தெரிவித்துள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…