Categories: சினிமா

LCU-வுக்கு 4வது பிறந்தநாள் இன்று.! இயக்குனர் லோகேஷின் முரட்டு சம்பவம் ‘கைதி’ வெளியான நாள்..!

Published by
மணிகண்டன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படம் உருவாகிறது என்றாலே அது LCU எனப்படும் லோகேஷ் சினிமா உலகத்தில் (Lokesh Cinematic Universe) வருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அது தளபதி விஜய் படமாக இருந்தாலும் சரி, சூப்பர் ஸ்டார் ரஜினி படமாக இருந்தாலும் சரி இந்த கேள்வியை கடக்காமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜால் படம் இயக்க முடியாது.

இந்த LCUவிற்கு துவக்க புள்ளி வைத்து இன்றோடு 4 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளாது. ஆம், லோகேஷ் முதன் முதலாக உருவாக்கிய அவரது சினிமா உலகின் முதல் படமான கைதி வெளியான நாள் இன்று. அதுவும் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான பிரமாண்ட பிகில் படத்துடன் தைரியமாக எனது படமும் பந்தயம் அடிக்கும் என நம்பி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் – நடிகர் கார்த்தி களமிறங்கிய நாள்.

லியோ கொண்டாட்டத்தில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய இயக்குனர் லோகேஷூக்கு காயம்! 

அந்த நம்பிக்கைக்கு பலனாக, பிகில் மாஸ் ஹிட்டானாலும் கூட, கைதி தமிழசினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் உண்மையில் பிகில் படத்தை விட  அதிகம். மாநகரம் எனும் சிறு பட்ஜெட் , ஆரம்ப கால ஹீரோக்கள் வைத்து சூப்பர் ஹிட் ரக படத்தை இயக்கிய லோகேஷுக்கு கிடைத்த அடுத்த திரைப்படம் கைதி.

அதிலும் தனக்கேற்ற கதாபாத்திரத்தை கட்சிதமாக தேர்வு செய்து பிசிறு தட்டாமல் நடித்து கொடுக்கும் கார்த்தியை இயக்கும் வாய்ப்பு லோகேஷுக்கு கிடைத்தது. கார்த்தியை வைத்து புது புது முயற்சிகள் மேற்கொண்டார் இயக்குனர் லோகேஷ். முழுப்படமும் இரவு நேர ஷூட்டிங். கதாநாயகி இல்லை. பாடல்கள் இல்லை. ஆயுள் தண்டனை கைதி மொத்த போலிசாரை காப்பாற்றி, பெரிய போதை மருந்து கும்பலை பிடித்து கொடுக்கும் ஒரே இரவில் நடக்கும் கதை என இயக்கி வெற்றி கண்டார்.

இந்த படத்தின் இறுதி காட்சியில் வில்லன் குரூப் ” சம்பந்தமே இல்லாமல் , வந்து மொத்ததையும் காலி செஞ்சிட்டு போய்ட்டான். யாருன்னே இவன்” என கேட்கும். அதற்கு வில்லன் ” இருக்கு. அவன் பேரு டில்லி.” என கூறுவார். அப்போது படம் பார்ப்பவர்களுக்கு தொற்றிக்கொண்ட சுவாரஸ்யம். 4 வருடங்கள் கடந்தும், இன்னும் நீள்கிறது என்றால், கைதியின் தாக்கம் எந்தளவுக்கு இருக்கும் என்பதை யோசித்து பாருங்கள்.

அடுத்து உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இயக்குனர் லோகேஷ் விக்ரம் படம் இயக்கி முடித்து ரிலீசுக்கு முன்னர் ஒரு இன்ப அதிர்ச்சி செய்தியை வெளியிடுகிறார். கைதி படம் பார்த்துவிட்டு விக்ரம் படம் பார்க்க வாருங்கள் என கூறுகிறார். அப்போது எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் இருக்க, அடுத்து இன்ப அதிர்ச்சியாய், இந்த LCUவில் அதிபயங்கர வில்லனான ரோலக்ஸ்-ஐ களமிறங்கினார்.

இப்படி இன்ப அதிர்ச்சிகளை கொடுத்து விட்டு தளபதி விஜயை வைத்து லியோ படத்தை எடுத்து முடித்தார். அதிலும் கைதி ரெபரென்ஸ், இறுதியில் விக்ரம் ரெபரென்ஸ் இருக்கும். ஆனால் விக்ரம் ஏற்படுத்திய LCU தாக்கம் அளவுக்கு இல்லை.

அதனால் கைதி இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கிடக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 திரைப்படத்தை இயக்க தயாராகிவிட்டார். ஆனால் இது LCU இல்லை. தனி படம் என முதலிலேயே அறிவித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர்.

கைதி 2 வை பார்க்க இன்னும் 2 வருடங்கள் காத்து கிடைக்க வேண்டுமே என ரசிகர்கள் அதனையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த LCUகளுக்கெல்லாம் ஆரம்ப புள்ளியாய் அமைந்த திரைப்படமான கைதி வெளியாகி இன்றோடு 4 வருடங்கள் ஆகிறது. இதனை ஒட்டி 4YearsOfKaithi என எக்ஸ் சமூக வலை தளத்தில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகிறனர் LCU ரசிகர்கள்.

Published by
மணிகண்டன்

Recent Posts

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு கட்டுப்பாடு? த.வெ.க பொருளாளர் சொல்வேதென்ன?

காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…

8 minutes ago

வெளுக்கப்போகும் கனமழை: இன்று 9 மாவட்டம், நாளை 5 மாவட்டம்.. எங்கெல்லாம் தெரியுமா?

சென்னை: தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…

22 minutes ago

குடியரசு தினவிழா கொண்டாட்டம்… ‘சென்னையில் போக்குவரத்து மாற்றம்’ – போக்குவரத்து காவல்துறை!

சென்னை: குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை…

38 minutes ago

நெய் விளக்கு ஏன் ஏற்ற வேண்டும் தெரியுமா ?அதன் அற்புதமான பலன்கள் இதோ..!

நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் மற்றும் எத்தனை விளக்கு ஏற்றலாம் என்பதை காணலாம். சென்னை :நாம் இறைவனை வழிபடும்…

48 minutes ago

“ஏற்கனவே அனகோண்டானு சொல்லி வச்சு செஞ்சிட்டாங்க” விழுந்து விழுந்து சிரித்த விஜய் ஆண்டனி!

சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…

1 hour ago

“இந்தியா கூட்டணிக்கு வாங்க” தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ் மாநிலத் தலைவர்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…

2 hours ago