தனது தம்பியை கெத்தாக தமிழ் சினிமாவில் களமிறக்கும் லாரன்ஸ்… இயக்குனர் யார் தெரியுமா.?

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் கிங் என அழைக்கப்படும் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கிறார்கள்.

இப்படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ், ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.  ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின் ஹீரோவாகவும், ராகவா லாரன்ஸ் சிறப்புக் கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. காமெடி, ஆக்ஷன், எமோஷன் என பக்கா கமர்ஷியல் படமாக இந்தப் படம் உருவாக உள்ளது.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. பூஜையில் ராகவா லாரன்ஸ், அவரது சகோதரர் எல்வின், இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தப்படத்தில் மேலும் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் இசையமைப்பாளர், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ராகவலரன்ஸ் ருத்ரன், அதிகாரம், சந்திரமுகி 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

18 mins ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

27 mins ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

36 mins ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

44 mins ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

51 mins ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago