கடந்த 1996 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் வெளியான திரைப்படம் “இந்தியன்”. இது உண்மையில் இன்று “தி பான் இந்தியா” என்று அழைக்கப்படுவதற்கு தகுதியான படம் என்றே கூறலாம். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 27 வருடங்கள் கழித்து, “இந்தியன் 2” என்ற தலைப்பிலான அதன் தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக இப்படத்தின் பல இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் 35 நாட்களில் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இந்தியன் 2 படம் குறித்து லேட்டஸ்ட்டாக சூப்பர் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அது என்னவென்றால், இந்தியன்2 படத்தில் ரயிலில் ஒரு சர்வதேச தரமான சண்டைக் காட்சி ஒன்று காட்டப்படவுள்ளதாம். இதனால் படக்குழு அடுத்த வாரம் தென்னாப்பிரிக்காவுக்குச் செல்லவுள்ளனர். அங்கு ஒரு ரயிலில் ஒரு பெரிய ஆக்ஷன் காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளனர், இது சர்வதேச அதிரடி நடன இயக்குனர்கள் குழுவால் எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
14 நாட்கள் ஷெட்யூல் அங்கு திட்டமிடப்பட்டு, முழு படப்பிடிப்பும் மே மாதத்திற்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை இந்த ஆண்டு தீபாவளி வெளியீட்டிற்கு தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். படத்தை லைக்கா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…