‘சந்திரமுகி 2′ ட்ரெய்லரில் மறைந்த நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி! கடைசி படம் எது?
தமிழ் சினிமாவில் என்னுள் ஆயிரம், மீ டியர் மார்த்தாண்டன், சத்யா, அபூர்வ சகோதரர்கள், மகளிர் மட்டும், கோலமாவு கோகிலா, பரமசிவன், அன்பே சிவம், சொன்னா புரியாது, நவீன சரஸ்வதி சபதம் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி.
ஆர்.எஸ்.சிவாஜி. அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தில் ஜனகராஜிடம் “சார்… நீங்க எங்கயோ போயிட்டீங்க” என்று பேசிய வசனம் இன்றுவரை மீம்களில் டேம்லேட் ஆக இருக்கிறது. அந்த அளவுக்கு பிரபலமான நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.
இதய பாதிப்பால் நீண்ட நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிழந்தார், இவருடைய மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
1981ம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வரும் இவர் கடைசியாக கார்கி படத்தில் நடித்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், ‘சந்திரமுகி 2′ திரைப்படத்தின் ட்ரெய்லரில், மறைந்த குணச்சித்திர நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி இடம்பெற்றிருந்தார். இவர், கடைசியாக நடித்த திரைப்படம் சந்திரமுகி 2 தானா? இல்லையெனில் வேறு ஏதும் திரைப்படங்கள் இருக்கிறதா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
யோகிபாபு நடித்த லக்கி மேன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை செப்-1ம் தேதி திரையரங்கில் வெளியானது. சந்திரமுகி 2 திரைப்படம் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது. அவர் திரையில் நடித்த திரைப்படம் இதுவாக இருக்குமா என்று இன்னும் சில நாட்கள் காத்திருக்கலாம்.