ஆறு பிலிம்பேர் விருதுகளை தட்டித்தூக்கிய அனிமல்!
ஒவ்வொரு ஆண்டும் பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை 68 பிலிம்பேர் விருதுகள் விழா நடைபெற்று இருக்கிறது. அதனை தொடர்ந்து 69-வது பிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சி குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று நடைபெற்றது.
அதில் சிறந்த நடிகர் விருதை அனிமல் படத்தில் நடித்ததற்காக ரன்பீர் கபூர் பெற்றார். இந்த விருதுமட்டுமின்றி அனிமல் படத்திற்கு ஆறு விருதுகள் கிடைத்துள்ளது.
அனிமல் படத்திற்கு 6 பிலிம்பேர் விருதுகள்
- சிறந்த நடிகர் – ரன்பீர் கபூர்
- சிறந்த இசை ஆல்பம் – அனிமல்
- சிறந்த பின்னணி பாடகர் : பூபிந்தர் பப்பல் (அனிமல்)
- சிறந்த பின்னணி இசை: ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் (அனிமல்)
- சிறந்த ஒலி வடிவமைப்பு: குணால் ஷர்மா (அனிமல்)
- வரவிருக்கும் சிறந்த இசை திறமை ( Best Upcoming Music Talent) – ஷ்ரேயாஸ் பாரானிக் ( அனிமல்)
அனிமல் திரைப்படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தினை இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் திரிப்தி டிம்ரி, பாபி தியோல், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக 900 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருந்தது.
அந்த நடிகர் கூட நடிப்பது அதிர்ஷ்டம்! மீனாட்சி சவுத்ரி ஓபன் டாக்!
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியானது. ஓடிடியிலும் படத்தை பார்த்த சிலரும் எதிர்மறையான விமர்சனங்களையே கூறிவருகிறார்கள். ஒரு பக்கம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் மற்றோரு பக்கம் படம் 6 பிலிம்பேர் விருதுகள்பெற்றுள்ளது. இதில் சிறந்த நடிகருக்கான விருதை தனது மனைவி அலியாபட் உடன் சேர்ந்து ரன்பீர் கபூர் பெற்றுக்கொண்டார்.